சத்தமில்லாமல் 2 சொதப்பல் மன்னர்களை கழட்டி விட்ட பி.சி.சி.ஐ – இனிமே வாய்ப்பே கிடைக்காதாம்

INDvsAUS

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 என மிக நீண்ட தொடரில் இந்த வருட நவம்பர், டிசம்பர் மற்றும் அடுத்த வருடம் ஜனவரி மாதங்களில் விளையாடுகிறது. இதற்கான மூன்றுவிதமான அணிகளும் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. நேரடியாக இதில் தேர்வான வீரர்கள் அனைவரும் துபாயில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு செல்வார்கள்.

INDvsAUS

அங்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்விதித்துள்ள விதிமுறைகள் உள்ள அனைத்து தனிமைப்படுத்துதல் விதிகளையும் பின்பற்றிவிட்டு அதன் பின்னர்தான் போட்டியில் களம் இறங்குவார்கள். மேலும், இந்த வருட ஐபிஎல் தொடரைக் கொண்டு ஒரு சில வீரர்கள் இடம் பிடித்தனர்.

சஞ்சு சாம்சன், தங்கராசு நடராஜன், வருன் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் போன்றவர்கள் ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடியதன் காரணமாக இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர். ஒரு சில வீரர்கள் இப்படி இடம் பிடித்தாலும் நன்றாக விளையாடாத 2 வீரர்கள் அணியில் இருந்து தூக்கி எறிய பட்டிருக்கின்றனர்

Jadhav

ஒன்று கேதர் ஜாதவ்… இவர் கடைசியாக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடினார். உலக கோப்பை தொடரில் நன்றாக விளையாடத போதிலும் தொடர்ந்து இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. நியூசிலாந்து தொடரில் இரண்டு ஒருநாள் போட்டிகளில் வெறும் 35 ரன்கள் மட்டுமே எடுத்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஆடிய இவர் 8 போட்டிகளில் விளையாடி வரும் 62 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த மோசமான ஆட்டம் பிசிசிஐ கண்ணைப் பறித்தது உடனடியாக அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

- Advertisement -

Dube

மற்றொரு வீரர் சிவம் துபே.. இவர் ஹர்திக் பாண்டியாவிற்கு மாற்றாக தேர்வு செய்யப்பட்ட ஆல்ரவுண்டர். மும்பையைச் சேர்ந்த இவர் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடி இருக்கிறார். தொடர்ந்து இவருக்கு இந்தியாவின் டி20 அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு அறிமுகமான இவர் 13 போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். பெங்களூரு அணியில் விளையாடும் இவர் இந்திய அணியில் தனது இடத்தை இழந்துவிட்டார். இந்த வருட ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடி 121 ரன்களும் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இதன் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.