- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியா – தெ.ஆ, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மாற்றம்.. புதிய அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் அணி களமிறங்குகிறது. ஆகஸ்ட் மாதம் துவக்கம் வரை நடைபெறும் அத்தொடரை முடித்துக் கொண்டு இந்தியா தாயகம் திரும்ப உள்ளது.

அதற்கடுத்ததாக வங்கதேச மண்ணில் 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. அந்தத் தொடர்கள் எல்லைப் பிரச்சனை காரணமாக தற்போது சந்தேகத்தில் இருக்கிறது. இருப்பினும் அதற்கடுத்ததாக தங்களுடைய சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக தலா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது.

- Advertisement -

புதிய மாற்றம்:

அந்தத் தொடருக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. தற்போது அந்த அட்டவணையில் கொல்கத்தாவில் நடைபெறும் போட்டி மட்டும் மாற்றம் செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன் படி இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2வது போட்டி கொல்கத்தாவுக்கு பதிலாக தலைநகர் டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு நடைபெறவிருந்த போட்டி தற்போது இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் தலைநகர் டெல்லியில் அதிகப்படியான பனிப்பொழிவு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை கருத்தில் கொண்டு எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மாற்றத்தை பிசிசிஐ செய்துள்ளதாக நம்பப்படுகிறது.

- Advertisement -

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ்:

அதைத் தொடர்ந்து தென்னாபிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் இந்தியா தங்களுடைய சொந்த ஊரில் விளையாடுகிறது. புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ள அட்டவணைகள் பின்வருமாறு:
முதல் டெஸ்ட்: அக்டோபர் 2, அகமதாபாத்
2வது டெஸ்ட்: அக்டோபர் 14, டெல்லி
இந்தியா – தென்னாப்பிரிக்கா:
முதல் டெஸ்ட்: நவம்பர் 14, கொல்கத்தா
2வது டெஸ்ட்: நவம்பர் 22, கௌகாத்தி

இதையும் படிங்க: சிஎஸ்கே, மும்பை மாதிரி ஆர்சிபி இதை அப்போவே செஞ்சுருந்தா.. இப்படி நடந்துருக்காது.. கவாஸ்கர் ஆதங்கம்

முதல் ஒன்டே: நவம்பர் 30, ராஞ்சி
2வது ஒன்டே: நவம்பர் 3, ராய்ப்பூர்
3வது ஒன்டே: டிசம்பர் 6, விசாகப்பட்டினம்
முதல் டி20: டிசம்பர் 9, கட்டாக்
2வது டி20: டிசம்பர் 11, சண்டிகர்
3வது டி20: டிசம்பர் 14, தரம்சாலா
4வது டி20: டிசம்பர் 17, லக்னோ
5வது டி20: டிசம்பர் 19, அகமதாபாத்

- Advertisement -