ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியை அறிவித்த கையோடு தோனிக்கு கவுரவம் அளித்த பி.சி.சி.ஐ – விவரம் இதோ

Dhoni
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடர் வரும் நவம்பர் 10ஆம் தேதியோடு நிறைவடைய உள்ளது. இந்த தொடர் நிறைவடைந்தவுடன் நேராக இந்திய அணி ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு நான்கு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்ற விளையாட இருக்கிறது.

INDvsAUS

- Advertisement -

இந்த தொடருக்கான போட்டி அட்டவணைகள் இரண்டு மாத காலத்திற்கு பெரிய தொடராக திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான 3 வடிவத்திற்கான இந்திய அணியையும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய தொடரும் திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி ஓய்வு பெற்ற தோனியின் பெயர் இந்தப் அணி வீரர்களின் பட்டியலில் இடம்பெறவில்லை. முதல் முறையாக தோனி இன்றி ஒரு பெரிய தொடரில் பங்கேற்று இந்திய அணி விளையாட இருப்பதால் தோனியின் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் உள்ளனர்.

Dhoni-2

ஆனால் தற்போது பிசிசிஐ தோனியை கவர கொடுக்கும் விதமாக ஒரு செயலை செய்துள்ளது. பலரும் தோனிக்கு பிரியா விடை போட்டி நடத்த வேண்டும் என்று நினைத்தபோது தோனி எதையும் எதிர்பார்க்காமல் ஓய்வு முடிவை திடீரென அறிவித்தார். தற்போது அதனை ஈடுகட்டும் விதமாக இல்லை என்றாலும் பிசிசிஐ தங்களால் முடிந்த ஒரு செயலை செய்துள்ளது.

dhoni 1

அதன்படி ஆஸ்திரேலிய அணியை அறிவித்த கையோடு தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் முகப்பு புகைப்படத்தை மாற்றி தோனியின் புகைப்படத்தை வைத்து “தேங்க்யூ எம்எஸ் தோனி” என்று அவரின் 16 ஆண்டு சேவைக்கு நன்றி என்று பி.சி.சி.ஐ கூறியுள்ளது. இந்த பதிவு தோனியின் ரசிகர்களால் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement