இந்தியாவில் இதற்கு பின்தான் கிரிக்கெட் துவங்குமாம். முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பி.சி.சி.ஐ அதிகாரி – அதிகாரபூர்வ தகவல்

BCCI
- Advertisement -

உலக அளவில் தனது ஆட்டத்தை நடத்திவரும் கொரோனவைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியா முழுவதும் தற்போது அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கால் முடங்கியுள்ளது. மேலும் மக்கள் வெளியில் வர கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து விளையாட்டு போட்டிகளும், அரசாங்க நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் என மக்கள் கூடும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டும் ஒத்தி வைக்கப்பட்டும் வருகின்றன.

Ind

- Advertisement -

மேலும் கடந்த மாதம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடர் கொரோனா வைரஸ் காரணமாகவும் ஆரம்பத்திலேயே ரத்து செய்யப்பட்டது. மேலும் கடந்த மார்ச் மாத இறுதியில் துவங்க இருந்த ஐபிஎல் தொடரும் இருமுறை தள்ளிவைக்கப்பட்டு இறுதியாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதாக பி.சி.சி.ஐ யால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஊடகங்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு ஆன்லைன் கூட்டத்தில் பேசிய பிசிசிஐ அதிகாரி ராகுல் ஜோரி இந்தியாவில் நடைபெற இருக்கும் கிரிக்கெட் போட்டிகள் குறித்த பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது : நாங்கள் அரசு விதித்துள்ள விதிமுறையை பின்பற்றி அனைத்து முடிவுகளையும் எடுத்து வருகிறோம்.

Ganguly

அதன்படி மழைக்காலம் முடிந்த பின்னரே இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை துவங்க முடியும் ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை உலகின் அனைத்து சிறந்த வீரர்களும் பங்கேற்பார்கள். அப்படி நடந்தால் மட்டுமே ஐபிஎல் தொடர் சுவாரசியமாக அமையும். அதற்கான நடவடிக்கைகளை நான் மேற்கொண்டு வருகிறேன். ஆனால் நாளையே நிலைமை சரியாகி விடாது நிலைமை சரியாக இன்னும் நாட்கள் எடுக்கும்.

- Advertisement -

மேலும் அரசாங்கத்தின் ஆலோசனையும் நாங்கள் பின்பற்ற வேண்டியுள்ளது. அத்துடன் வெளிநாட்டு வீரர்களை அழைப்பதற்கு அரசின் அறிவுரைகள் பெறவேண்டும். தற்போது வெளிநாட்டு விமானங்கள் எதுவும் இயங்கவில்லை. எப்போது விமானங்கள் இயக்கப்பட்டாலும் அப்போது வீரர்கள் விளையாடு வதற்கு முன்பாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இவரின் இந்த கருத்துகள் காரணமாக இந்தியாவில் அடுத்த சில மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகள் நடப்பது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. மேலும் ஜூன் ஜூலை மாதங்களில் நடைபெற இருந்த இலங்கை தொடரும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடக்க இன்னும் மூன்று நான்கு மாதங்கள் வரை ஆகும் என்றும் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement