இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19-வது சீசனானது மார்ச் 28-ஆம் தேதியான இன்று சின்னசாமி மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றன.
துவக்க விழா கொண்டாட்டத்தை ரத்து செய்த பி.சி.சி.ஐ :
இதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் அங்கு தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். எப்போதுமே ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் போது முதல் நாள் ஆட்டத்திற்கு முன்னதாக பிரபல நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகளுடன் ஒரு பிரம்மாண்டமான துவக்க விழா நடைபெறும். அந்த கண்கவர் நிகழ்ச்சிகள் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையிலும் இருக்கும்.
ஆனால் இந்த ஆண்டு சின்னசாமி மைதானத்தில் 2026 ஐ.பி.எல் தொடருக்கான துவக்க விழா நடைபெறாது என்றும் நேரடியாக பெங்களூரு மற்றும் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி துவங்கி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதற்கு காரணம் யாதெனில் :
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் வெற்றிக்குப் பின்னர் ஆர்.சி.பி அணி ஏற்பாடு செய்த கொண்டாட்ட விழாவின் போது ஜூன் 4-ஆம் தேதி அன்று கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். அந்த துயர சம்பவத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த ஆண்டு துவக்க விழாவை பி.சி.சி.ஐ ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில் :
இதையும் படிங்க : இன்றைய முதல்நாள் ஆட்டத்திலேயே வரலாற்று சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – புவனேஷ்வர் குமார்
கடந்த ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி நடைபெற்ற மோசமான சம்பவத்தை நினைத்து வருத்தப்படுகிறோம். உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த ஆண்டு துவக்க விழா கொண்டாட்டமோ, கலை நிகழ்ச்சிகளோ எதுவும் நடத்தப்படாது என்றும் மே 31-ஆம் தேதி அன்று நடைபெற இருக்கும் இறுதிப்போட்டிக்கு முன்னர் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



