சென்ற வருடம் மாதிரி இந்த வருட ஐ.பி.எல் தொடரிலும் இது இருக்காதாம் – நல்ல முடிவுதான்

Ipl cup

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஐபிஎல் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஐபிஎல் தொடர் தொடங்கும் போதும் மிக பிரம்மாண்டமான தொடக்க விழா நடைபெறும்.

Ipl opening

அந்த தொடக்க விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் பங்கேற்பார்கள். வண்ணமயமான கலை நிகழ்ச்சி மற்றும் வானவேடிக்கைகள் என அந்த தொடக்க விழா அமர்க்களமாக இருக்கும் ஆனால் இந்த ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி இருக்காது என பிசிசிஐ நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில் : தொடக்க விழாக்கள் பணம் தான் செலவாகிறது அதைத்தவிர வேறு ஒரு பிரயோஜனமும் இல்லை. எனவே இனிவரும் தொடர்களில் தொடக்க விழாக்கள் இருக்காது எனவும், அந்த தொடக்க விழாக்களில் பங்கேற்கும் பிரபலங்கள் அதிக பணம் கேட்பதால் தேவையற்ற செலவு இருக்கிறது.

staripl

அந்த துவக்கவிழா ஒருநாளுக்காக இவ்வளவு செலவா என்று யோசித்த நிர்வாகம் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடக்க விழாவை ரத்து செய்து புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பலியான குடும்பங்களுக்கு நிதி உதவியாக வழங்கியது. எனவே இனிவரும் தொடர்களிலும் தொடக்க விழாக்களை நடத்தாமல் வேறு காரியத்திற்காக அதனை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -