ஆஸ்திரேலிய தொடருக்கான டி20 அணியை அறிவித்த பி.சி.சி.ஐ – 2 தமிழக வீரர்கள் இடம்பெற்று அசத்தல்

teamindia

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடர் வரும் நவம்பர் 10ஆம் தேதியோடு நிறைவடைய உள்ளது. இந்த தொடர் நிறைவடைந்தவுடன் நேராக இந்திய அணி ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு நான்கு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்ற விளையாட இருக்கிறது.

இந்த தொடருக்கான போட்டி அட்டவணைகள் இரண்டு மாத காலத்திற்கு பெரிய தொடராக திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய டி20 அணியை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக நேற்று வெளியிட்டது. இந்த அணியில் தமிழக வீரர்களான வாஷிங்க்டன் சுந்தர் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர்க்கு இடம் கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலிய தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய ஒருநாள் அணி இதோ :

1) கோலி 2) தவான் 3) அகர்வால் 4) கே.எல்.ராகுல் 5) ஷ்ரேயாஸ் ஐயர் 6) மனீஷ் பாண்டே 7) ஹார்டிக் பாண்டியா 8) சஞ்சு சாம்சன் 9) ஜடேஜா 10) சுந்தர் 11) சாஹல் 12) பும்ரா 13) ஷமி 14) சைனி 15) தீபக் சாகர் 16) வருண் சக்ரவர்த்தி

- Advertisement -

varun chakravarthy

இந்த தொடரின் முதல் டி20 போட்டி டிசம்பர் 4 ஆம் தேதி , இரண்டாவது டி20 போட்டி 6 ஆம் தேதி , மூன்றாவது டி20 போட்டி 8 ஆகிய தேதிகளில் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.