இங்கிலாந்து தொடருக்கு முன்பாக மற்றொரு தொடரில் இந்திய அணி விளையாடும் – பி.சி.சி.ஐ அதிகாரபூர்வ அறிவிப்பு

Ganguly
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடர் வீரர்களிடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் அடுத்த அறிவிப்பு வரும்வரை இந்த தொடர் நடைபெறுவது சந்தேகம் என கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து தற்போது இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக விளையாட இங்கிலாந்து செல்ல உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.

ind

- Advertisement -

அதன்படி இந்த போட்டிக்கான இந்திய அணி வரும் 25-ஆம் தேதி இந்தியாவில் இருந்து இங்கிலாந்து புறப்படுவார்கள் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது. மேலும் இந்த தொடரை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பின் படி இங்கிலாந்து தொடருக்கு முன்பாக இந்திய அணி ஜூலை மாதத்தில் ஒரு புதிய தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாடி என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 18-ஆம் தேதி துவங்கி 22ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முடிவடையும் என்பதால் அதன் பிறகு இந்தியா அங்கிருந்து இலங்கை சென்று 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் என கங்குலி கூறியுள்ளார்.

sl

மேலும் இந்த தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா போன்ற பல அனுபவ வீரர்கள் விளையாடமாட்டார்கள் என்றும் இளம் வீரர்களைக் கொண்ட அணியை இந்த இலங்கை சுற்றுப்பயணத்தில் பங்கேற்று விளையாடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

rohith

அது மட்டுமின்றி அதன் பிறகு இந்தியாவில் ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்தும் நாங்கள் யோசிக்க உள்ளோம் என்றும் கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement