INDvsSL : புதிய டெஸ்ட் கேப்டன் அறிவிப்பு – 4 சீனியர் வீரர்கள் நீக்கம்! முழு இந்திய டெஸ்ட்,டி20 அணி அறிவிப்பு

IND
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதலில் நடந்த ஒருநாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட்வாஷ் வெற்றியை பதிவு செய்த இந்தியா அடுத்ததாக நடைபெற்று வரும் டி20 தொடரில் இதுவரை முடிந்துள்ள 2 போட்டிகளின் முடிவில் 2 – 0* என கோப்பையை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.

INDvsSL-1

- Advertisement -

பிப்ரவரி 20ஆம் தேதியுடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்த இந்திய சுற்றுப்பயணம் நிறைவுக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து அண்டை நாடான இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.

இலங்கை தொடர்:
வரும் பிப்ரவரி 24ஆம் தேதி துவங்க உள்ள இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் பிப்ரவரி 24, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டி லக்னோவிலும் எஞ்சிய 2 போட்டிகள் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசலாவிலும் நடைபெற உள்ளது.

 

- Advertisement -

INDvsSL

அதை தொடர்ந்து நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் போட்டி மார்ச் 4ஆம் தேதியன்று மொஹாலியிலும் 2வது போட்டி மார்ச் 12ஆம் தேதியன்று பெங்களூருவிலும் நடைபெற உள்ளது. இதில் பெங்களூருவில் நடைபெற உள்ள 2வது போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக இளஞ்சிவப்பு நிற பந்தில் நடைபெற உள்ளது.

இந்திய அணி அறிவிப்பு:
இந்நிலையில் இலங்கையின் இந்த சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணியை இந்திய தேர்வு குழு தலைவர் சேட்டன் சர்மா அறிவித்துள்ளார். இதில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த இந்தியாவின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற கேள்விக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய விராட் கோலி கடந்த மாதம் அந்த பதவியில் இருந்து திடீரென விலகியிருந்தார்.

- Advertisement -

rohith

சேட்டன் சர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக அனுபவ வீரர் ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான முழுநேர கேப்டனாக கடந்த மாதம் பொறுப்பேற்ற நிலையில் தற்போது டெஸ்ட் கேப்டன் பதவியும் அவரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான இந்திய கிரிக்கெட்டின் முழுநேர கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட உள்ளார். அதே போல் இந்திய டெஸ்ட், டி20 அணியின் புதிய துணை கேப்டனாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ரகானே, புஜாரா நீக்கம்:
அதேபோல் இந்திய டெஸ்ட் அணியில் கடந்த சில வருடங்களாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் படுமோசமான பார்மில் திண்டாடி வரும் அனுபவ வீரர்கள் அஜிங்கிய ரஹானே மற்றும் செடேஸ்வர் புஜாரா ஆகியோர் நீண்ட நாட்களுக்கு பின் இந்திய அணியில் இருந்து முதல் முறையாக நீக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன் அனுபவ விக்கெட் கீப்பர் ரித்திமான் சஹா, அனுபவ வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா ஆகியோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

- Advertisement -

pujara 1

முன்னதாக இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற உள்ள டி20 தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆல்-ரவுண்டர் ஷார்துல் தாகூருக்கு இந்த சுற்றுப் பயணம் முழுவதும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த டி20 அணியில் காயத்தால் அவதிப்பட்டு வந்த நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா அதிலிருந்து முழுமையாக குணமடைந்து இடம் பிடித்துள்ளார். அதேபோல் டி20 தொடரில் நீண்ட நாட்களுக்குப்பின் சஞ்சு சாம்சன் இடம் பிடித்துள்ளார். இவர்களுடன் அவேஷ் கான், ருதுராஜ் கைக்வாட் போன்ற இளம் வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை டி20 தொடருக்கான இந்திய அணி இதோ:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை-கேப்டன்), ருதுராஜ் கைக்வாட், ஷ்ரேயஸ் ஐயர், சூர்ய குமார் யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷான் (கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், தீபக் சஹர், தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா, யூஸ்வென்ற சஹால், ரவி பிஷ்ணோய், குல்தீப் யாதவ், முகமத் சிராஜ், புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல்,அவேஷ் கான்.

அதேபோல் இந்த சுற்றுப்பயணத்தில் 2வதாக நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரில் ரவீந்திர ஜடேஜா இடம் பிடித்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. மேலும் டி20 தொடரில் ஓய்வெடுக்கும் விராட் கோலி, ரிஷப் பண்ட் போன்ற முக்கிய வீரர்கள் டெஸ்ட் தொடருக்கு திரும்புகிறார்கள். இருப்பினும் இந்த டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் காயத்திலிருந்து குணமடைந்தால் மட்டுமே களத்தில் விளையாட வாய்ப்பளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

INDvsSL

அதே சமயம் மோசமான பார்ம் காரணமாக தடுமாறி வந்த குல்தீப் யாதவுக்கு இந்த அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அணியில் காயத்தால் அவதிப்பட்டு வந்த சுப்மன் கில் மீண்டும் திரும்புகிறார். இது மட்டுமில்லாமல் பிரியங் பஞ்சல், சௌரப் குமார் போன்ற புதுமுகங்களுக்கு இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க : பிஎஸ்எல் தொடரில் சம்பளம் தரவில்லை ! பாதியிலேயே வெளியேறி அம்பலப்படுத்திய ஆஸி வீரர், பழிவாங்கிய பாகிஸ்தான்

இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இதோ:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, பிரியங் பஞ்சல், மயங் அகர்வால், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ஹனுமா விஹாரி, சுப்மன் கில், ரிஷப் பண்ட் (கீப்பர்), கேஎஸ் பாரத், ரவீந்திர ஜடேஜா, ஜெயந் யாதவ், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், சௌரப் குமார், முகமத் சிராஜ், உமேஷ் யாதவ், முகமத் ஷமி.

Advertisement