இந்தியா விளையாடும் கிரிக்கெட் போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு இலவசம், எங்கே எப்போது – முழு விவரம் இதோ

Women's IND
- Advertisement -

சர்வதேச அரங்கில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளுக்கு சவாலை கொடுக்கும் வகையில் ஆடவர் கிரிக்கெட்டில் கொடிகட்டி பறக்கும் இந்தியா மகளிர் கிரிக்கெட்டில் இன்னும் கத்துக்குட்டியாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக 90களில் சச்சின் அடித்தால் தான் ஜெயிக்க முடியும் என்ற நிலைமையை போல் இப்போதைய அணியில் ஒரு சில மேட்ச் வின்னர்கள் மட்டுமே இருப்பதால் நிறைய போட்டிகளில் கையில் இருக்கும் வெற்றியை கோட்டை விடும் அளவுக்கு மகளிர் அணியினர் செயல்பட்டு வருகிறார்கள். சொல்லப்போனால் ஆடவர் கிரிக்கெட்டில் 1983லேயே உலகக்கோப்பையை வென்று ஆலமரமாய் வளர்ந்து விட்ட இந்தியா மகளிர் கிரிக்கெட்டில் இன்னும் ஒரு உலக கோப்பையை கூட தொட முடியாமல் அதள பாதாளத்தில் திண்டாடுகிறது.

மறுபுறம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகள் 80களிலேயே அடுத்தடுத்த உலகக் கோப்பைகளை வென்று மகளிர் கிரிக்கெட்டை ஆட்சி செய்து வருகின்றன. அதனால் ஒரு அணி வென்றால் ஒரு அணி தோற்றாக வேண்டும் என்ற கூற்றுப்படி கடந்த பல வருடங்களாக மகளிர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஜொலிப்பதற்கு இந்தியா அடிமையை போல் அடி வாங்கி வருகிறது என்றே கூறலாம். அதனால் ஐசிசி உலக கோப்பைகளில் நாக் அவுட் சுற்றை தொட்டாலே அது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படும் நிலையில் கடைசியாக கடந்த 2020 டி20 உலக கோப்பையில் பைனல் வரை சென்று தோல்வியை சந்தித்த மகளிர் அணி இந்த வருடம் நியூசிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் லீக் சுற்றுடன் நடைபெற்றது.

- Advertisement -

இலவச டிக்கெட்:
அந்த நிலையில் சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் லீக் சுற்றில் அசத்தலாக செயல்பட்டு பைனலில் வெற்றியை கையில் வைத்திருந்த இந்தியா வழக்கம் போல கடைசி நேரத்தில் அழுத்தத்தை தாங்க முடியாமல் தோற்று ஆஸ்திரேலியாவிடம் தங்கப் பதக்கத்தை தாரை பார்த்தது. அப்படி திண்டாட்டமாக செயல்படும் காரணத்தாலேயே மகளிர் போட்டிகள் நடைபெறும் போது அதை பார்க்க பெரும்பாலான ரசிகர்களும் ஆர்வம் காட்டுவதில்லை. அப்படி துவண்டு கிடக்கும் இந்திய மகளிர் கிரிக்கெட்டை தூக்குவதற்காக ஆடவர் கிரிக்கெட்டில் கொடி கட்டி பறக்க முக்கிய காரணமாக திகழும் ஐபிஎல் தொடரின் மகளிர் வெர்ஷனை வரும் 2023இல் நடத்த திட்டமிட்டுள்ள பிசிசிஐ அதற்கு முன்பாக ரசிகர்களை கவர்வதற்காக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது வரும் 2023ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெறும் மகளிர் டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்தியா வந்துள்ள நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. காலம் காலமாக இந்தியாவை அடித்து துவைத்து வரும் ஆஸ்திரேலிய மகளிரணி இம்முறை சொந்த மண்ணிலும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் வரலாற்றில் 25 டி20 போட்டிகளில் இவ்விரு அணிகளும் மோதிய நிலையில் 18 வெற்றிகளை சுவைத்து ஆஸ்திரேலியா வலுவான அணியாக திகழ்கிறது. இந்தியா வெறும் 6 வெற்றிகளை மட்டுமே பெற்றது. கடைசி 5 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா தான் ஒரு தலைபட்சமாக வென்றது.

- Advertisement -

அதனால் இப்போட்டியை பார்க்க பெரும்பாலான ரசிகர்கள் வரமாட்டார்கள் என்பதை தெரிந்த பிசிசிஐ மகளிர் கிரிக்கெட்டை எப்படியாவது வளர்க்க வேண்டும் என்ற போராட்டத்தில் டிசம்பர் 9ஆம் தேதியான இன்று இரவு 7 மணிக்கு நவிமும்பையில் துவங்கும் இத்தொடரின் முதல் போட்டியை பார்ப்பதற்கு வரும் அனைத்து ரசிகர்களுக்கும் கட்டணமின்றி இலவச அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதனால் ஸ்மிருதி மந்தனா, கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் போன்ற நட்சத்திர வீராங்கனைகள் களமிறங்கும் இப்போட்டியை பார்ப்பதற்கு மும்பையில் இருக்கும் நிறைய ரசிகர்கள் ஆர்வத்துடன் சென்று மைதானத்தை நிரப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தகரமா நினைக்காதிங்க, அவரிடம் பாண்டியாவுக்கு நிகரான திறமை இருக்கு – இளம் தமிழக வீரரை பாராட்டும் சிவராம கிருஷ்ணன்

இந்த முடிவை இந்திய கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் ஆர்வலர்கள் வரவேற்று பாராட்டுகிறார்கள். இதனால் அடுத்த வருடம் நடைபெறும் மகளிர் ஐபிஎல் தொடர் முதல் முறையாக நடைபெறும் போது ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement