சர்வதேச கிரிக்கெட்டை அழிக்க தயாராகும் ஐபிஎல் – பிசிசிஐயிடம் அடிபணிந்த ஐசிசி, வரமும் சாபமும் இதோ

T2 World Cup vs IPL ICC vs BCCI
- Advertisement -

இந்தியாவில் உள்ள தரமான வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பளித்து பட்டை தீட்டி உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக சர்வதேச கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் நோக்கிலேயே கடந்த 2008இல் 8 அணிகளுடன் ஐபிஎல் தொடர் துவங்கப்பட்டது. அந்த நல்ல நோக்கத்தால் கடந்த பல வருடங்களில் நிறைய தரமான வீரர்கள் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் வெளி நாடுகளுக்கும் கிடைத்தனர். அதேபோல் ஒரு காலத்தில் 50 ஓவர்களில் 250 ரன்களை கூட அடிக்க முடியாமல் திணறிய நிலைமை இன்று 20 ஓவர்களிலேயே 250 ரன்களை அடிக்கும் அளவுக்கு புதிய பரிணாமத்தை எட்டியுள்ளது.

IPL 2022 (2)

- Advertisement -

அந்த வகையில் ஐபிஎல் என்பது உருவாக்கப்பட்ட நோக்கத்தை காட்டிலும் இரு மடங்கு வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஆனால் கடந்த 15 வருடங்களில் கற்பனைக்கெட்டாத வளர்ச்சியை பெற்றுள்ள ஐபிஎல் அடுத்த 15 வருடங்களில் சர்வதேச கிரிக்கெட்டை அழிக்கப்போகும் ஒரு அசுரனாக அவதரித்துள்ளதைப் பற்றி பார்ப்போம்.

தரமும் பணமும்:
பொதுவாக ஐபிஎல் தொடரில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று நாற்காலியின் நுனியில் ரசிகர்களை அமர வைக்கும் அளவுக்கு பரபரப்பான தருணங்களை கொடுத்து எதிர்பாராத முடிவுகளை விருந்தாக படைக்கிறது. அதனால் ஐசிசி நடத்தும் உலக கோப்பைகளை விட உலகத்தரம் வாய்ந்த தொடராக ஐபிஎல் உள்ளதென்று சுனில் கவாஸ்கர், ஏபி டிவிலியர்ஸ் போன்ற ஜாம்பவான்களே சமீப காலங்களில் பாராட்டியுள்ளனர்.

MS Dhoni vs MI

மேலும் நிமிடத்திற்கு நிமிடம் அனல் பறக்கும் ஐபிஎல் தொடரை பார்த்த ரசிகர்களுக்கு சர்வதேச டி20 தொடர்கள் (எடுத்துக்காட்டாக இந்தியா – இலங்கை, ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான்) தரமில்லாமல் அலுப்பு தட்டுவதாக இருப்பதால் கால்பந்தை போல அதை டி20 உலகக் கோப்பையாக மட்டும் நடத்திவிட்டு எஞ்சிய சமயங்களில் பெரிய ஐபிஎல் அல்லது வருடத்திற்கு 2 ஐபிஎல் தொடரை நடத்தலாம் என்று ரவி சாஸ்திரி, ஆகாஷ் சோப்ரா போன்ற முன்னாள் வீரர்கள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர்.

- Advertisement -

இது ஒருபுறம் இருக்க ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதிக்கும் பிசிசிஐ ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஏன் சர்வதேச போட்டிகளை நடத்தும் ஐசிசியை விட பணக்கார கிரிக்கெட் வாரியமாக மாறியுள்ளது. அதைவிட தாய்நாட்டுக்காக சர்வதேச அளவில் ஒரு வருடம் விளையாடினாலும் 1 கோடி கிடைப்பதில்லை.

Pandya

ஆனால் ஐபிஎல் தொடரில் வெறும் 2 மாதங்கள் விளையாட 5, 10 கோடிகள் போன்ற தொகைகள் சம்பளமாக கிடைக்கின்றன. எனவே சமீப காலங்களில் தாய்நாட்டுக்காக விளையாடுவதை விட ஐபிஎல் தொடரில் விளையாட பெரும்பாலான வீரர்கள் முன்னுரிமை அளிப்பதை கண்கூடாக பார்த்தோம். இவை அனைத்துமே ஒட்டுமொத்த உலக கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் ஒரு தொடராக ஐபிஎல் உருமாறியதை இத்தனை நாட்களாக மறைமுகமாக மட்டுமே காட்டிக் கொண்டிருந்தது.

- Advertisement -

விரிவடையும் அசுரன்:
ஆனால் சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஒளிபரப்பு ஏலம் அதை அதிகாரப்பூர்வமாக உலகிற்கு அறிவித்துள்ளது. ஆம் அனல் பறக்கும் ஐபிஎல் தொடரை மைதானத்திற்கு வந்து நேரில் பார்க்க முடியாத ரசிகர்களுக்கு அந்த தருணங்களை நேரலையாக ஒளிபரப்பி வந்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமத்தின் ஒப்பந்தம் இந்த வருடத்துடன் முடிவடைந்தது. அதை தொடர்ந்து 2023 – 2027 காலகட்டத்தின் ஒளிபரப்பு உரிமையை வாங்குவதற்காக மின்னணு முறையில் மும்பையில் கடந்த ஜூன் 12, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஏலத்தில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை டிஸ்னி ஸ்டார், வியாகாம்18, டைம்ஸ் இன்டெர்நெட் ஆகிய 3 நிறுவனங்கள் சேர்ந்து 48,390 கோடி என்ற பிரமாண்ட தொகைக்கு வாங்கின.

IPL vs EPL

அதனால் 115.40 கோடி என ஒரு ஐபிஎல் போட்டியின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. அதன் காரணமாக ஐசிசி எல்லாம் ஒரு தூசி என்பது போல் ஈபிஎல், எம்பிஎல், என்பின்ஏ போன்ற இங்கிலாந்து, அமெரிக்கா நடத்தும் கால்பந்து, கூடைப்பந்து விளையாட்டு தொடர்களையும் முந்தியுள்ள ஐபிஎல் இன்று வியாபார ரீதியில் உலகின் நம்பர் 2 விளையாட்டு தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

- Advertisement -

1. இந்த ஏலத்தில் 2023 – 2027 வரையிலான காலகட்டத்தில் 410 போட்டிகள் நடைபெறும் என்று ஏலதாரர்களுக்கு பிசிசிஐ உறுதியளித்துள்ளது தான் சர்வதேச கிரிக்கெட் அழிக்கும் அசுரனாக ஐபிஎல் மாறுவதை காட்டுகிறது.

IPL 2022

2. ஆம் ஏற்கனவே 8 அணிகளுடன் 60 போட்டிக்களுடன் நடைபெற்று வந்த ஐபிஎல் இந்த வருடம் 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டதால் 10 அணிகளுடன் 74 போட்டிகளாக விரிவுபடுத்தப்பட்டது. அந்த வகையில் 2023 – 2027 காலகட்டத்திற்கு 74 போட்டிகள் வீதம் கணக்குப் போட்டால் 370 போட்டிகள் மட்டுமே வருகிறது.

3. எனவே 84 அல்லது 94 போட்டிகளாக ஐபிஎல் விரிவடைந்தால் தான் 410 போட்டிகள் வரும். அந்த வகையில் வரும் 2025 முதல் 84 அல்லது 94 போட்டிகள் கொண்ட தொடராக ஐபிஎல் விரிவடைய உள்ளது.

Jay-shah

அடிபணிந்த ஐசிசி:
இது பற்றி பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதிகாரபூர்வமாக தெரிவித்தது பின்வருமாறு. “அடுத்த ஐசிசி கால அட்டவணையில் (எஃப்டிபி) இரண்டரை மாதங்கள் ஐபிஎல் நடைபெறும் வகையில் மாற்றங்கள் செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அப்போதுதான் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியும்” என்று கூறினார். அதாவது ஐபிஎல் தொடரை விரிவு படுத்துகிறோம் என்று ஐசிசியிடம் பிசிசிஐ கோரிக்கை எதுவும் வைக்கவில்லை.

மாறாக ஐபிஎல் தொடரை விரைவு படுத்துகிறோம் அதனால் சர்வதேச போட்டிகளை குறைத்துக் கொள்ளுங்கள் என்று கட்டளையிட்டுள்ளது. இதற்கு ஐசிசியும் அடிபணிந்துள்ளது. காரணம் உலக கோப்பைகளை நடத்தினால் வரும் வருமானத்தை விட ஐபிஎல் தொடரை நடத்த அனுமதி அளித்தால் பிசிசிஐ கொடுக்கும் வருமானம் இருமடங்காகும்.

வாரமும் சாபமும்:
1. இது வெறும் ஆரம்பம் மட்டுமே. இந்த முயற்சி நிச்சயமாக வெற்றி பெறும் என்பதால் வரும் காலங்களில் ரவி சாஸ்திரி போன்றவர்கள் கூறியதைப்போல் வருடத்திற்கு 2 ஐபிஎல் நடைபெறப் போகிறது.

2. அதுவும் நிச்சயம் வெற்றி பெறும் என்பதால் வருங்காலத்தில் கால்பந்து போல சர்வதேச டி20 போட்டிகள் என்பது டி20 உலக கோப்பையை மட்டும் 2 வருடத்திற்கு ஒருமுறை நடைபெறப் போகிறது.

INDvsRSA

3. இதனால் கால்பந்துக்கு நிகராக உலகின் நம்பர் ஒன் விளையாட்டாக கிரிக்கெட் உருவெடுப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பதும் தற்போதுள்ளதை விட இன்னும் பல மடங்கு தரமும் பணமும் பெருகும் என்பது வரமாகும்.

3. ஆனால் இந்த அசுர வளர்ச்சியால் சர்வதேச இருதரப்பு டி20 தொடர்கள் காணாமல் போவதுடன் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் குறைந்து போவதற்கான அதிக வாய்ப்புள்ளது சாபமாகும்.

இதையும் படிங்க : சுமார் பேட்டிங், கேப்டன்ஷிப் பரவால்ல ! ஆனால் இதிலும் சொதப்பலா – அதற்கு சரிப்பட்டு வராத ரிஷப் பண்ட்

4. அதேபோல் பணக்காரன் பணக்காரன் ஆவான், ஏழை ஏழையாகவே இருப்பான் என்பது போல உலக கிரிக்கெட்டை ஆட்சி செய்யும் நாடாக இந்தியா உருவெடுக்கும். ஆனால் ஜிம்பாப்வே, கென்யா போன்ற கத்துக்குட்டிகள் தரத்திலும் பணத்திலும் தற்போது இருக்கும் நிலையைவிட பின் தங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

Advertisement