சுமார் பேட்டிங், கேப்டன்ஷிப் பரவால்ல ! ஆனால் இதிலும் சொதப்பலா – அதற்கு சரிப்பட்டு வராத ரிஷப் பண்ட்

Pant-4
- Advertisement -

இந்தியா தனது சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் கட்டாக் ஆகிய நகரங்களில் நடைபெற்ற இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் இந்தியா நிர்ணயித்த இலக்கை அசால்டாக சேசிங் செய்த தென்ஆப்பிரிக்கா 12 வெற்றிகளுடன் உலக சாதனை படைத்து வெற்றி நடை போட்டு வந்த இந்தியாவுக்கு சொந்த மண்ணில் அடுத்தடுத்து தோல்விகளை பரிசளித்து 2 – 0 என ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதனால் பெரிய பின்னடைவை சந்தித்த இந்தியா இந்த தொடரை வெல்வதற்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 3-வது போட்டியில் வென்றே தீரவேண்டும் என்ற வாழ்வா சாவா நிலைமையில் பொறுப்பாக செயல்பட்டு 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

IND vs RSA Chahal Axar Patel

- Advertisement -

அந்த வெற்றியால் சற்று நிம்மதி அடைந்தாலும் இன்னும் 2 – 1* (5) என்ற கணக்கில் தொடரில் பின்தங்கியுள்ளதால் எஞ்சிய 2 போட்டிகளில் வென்றால் மட்டுமே சொந்த மண்ணில் மானத்தை பறக்க விடாமல் கோப்பையை வெல்ல முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா உள்ளது. அந்த நிலைமையில் ஜூன் 17இல் ராஜ்கோட் நகரில் நடைபெறும் முக்கியமான 4-வது போட்டியில் மீண்டும் வென்றே தீரவேண்டும் என்ற நிலைமையில் ரிஷப் பண்ட் தலைமையிலான இந்தியா களமிறங்குகிறது.

சுமார் பேட்டிங்:
முன்னதாக இந்த தொடருக்கு கேப்டன் ரோகித் தர்மா ஓய்வு எடுப்பதால் கேப்டனாக அறிவிக்கப்பட்ட கேஎல் ராகுல் துரதிஷ்டவசமாக காயத்தால் விலகினார். அதனால் திடீரென கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரிஷப் பண்ட் இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலும் ஒரு பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சுமாராக செயல்படுவது பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. முதலில் ஒரு கேப்டன் பேட்ஸ்மேனாக பொறுப்புடன் முன்னின்று பேட்டிங் செய்ய வேண்டிய அவர் இந்த தொடரில் இதுவரை நடந்த 3 போட்டிகளிலும் பெரிய அளவில் ரன்களை எடுக்கவில்லை. மாறாக முக்கிய நேரத்தில் சிக்ஸர் அடிக்கப்போகிறேன் என்ற வகையில் குருட்டுத்தனமான ஷாட்டை அடித்து அவுட்டாகி விடுகிறார்.

pant 1

5, 6 என கடைசி 2 போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டான அவர் சொந்த மண்ணில் நடந்த சர்வதேச டி20 போட்டிகளில் அதிக முறை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டான இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பரிதாப சாதனை படைத்தார். அவர் இதுவரை சொந்த மண்ணில் இந்தியாவுக்காக 20 இன்னிங்சில் 7 முறை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகியுள்ளார், ஆனால் எம்எஸ் தோனி, தினேஷ் கார்த்திக், கேஎல் ராகுல் போன்ற எஞ்சிய விக்கெட் கீப்பர்கள் அனைவரும் சேர்ந்து 38 இன்னிங்சில் 6 முறை மட்டுமே ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்துள்ளனர்.

- Advertisement -

சுமாரான கேப்டன்ஷிப்:
அதைவிட இந்த தொடரில் அவரின் கேப்டன்ஷிப் மோசமாகவே இருந்து வருகிறது. ஏனெனில் பரபரப்பாக போட்டி நடைபெறும் தருணத்தில் எந்த சமயத்தில் எந்த பவுலரை எப்போது பயன்படுத்த வேண்டும் என்ற முடிவை சிறந்த வகையில் எடுப்பது தான் ஒரு கேப்டனின் அடிப்படையான தலையாய கடமையாகும். ஆனால் முதல் 2 போட்டிகளில் ஒருசில ஓவர்கள் சுமாராக வீசினார்கள் என்பதற்காக சஹால், அக்சர் படேல் ஆகியோருக்கு முழுமையான 4 ஓவர்களை அவர் வழங்கவில்லை.

RIshabh Pant Fans

அதுகூட பரவாயில்லை குறைந்த ரன்களைக் கொடுத்து தரமாக பந்து வீசிய ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான் போன்ற பவுலர்களுக்கும் முழுமையான 4 ஓவர்கள் வழங்கவில்லை. அத்துடன் 6 பவர்பிளே ஓவர்களை வீசுவதற்கு 5 பவுலர்களை உபயோகப்படுத்தும் அவர் இந்திய பவுலர்களின் பலத்தை ஆரம்பத்திலேயே எதிரணிக்கு காட்டிவிடுகிறார்.

- Advertisement -

டிஆர்எஸ் சொதப்பல்:
இந்த நிலைமையில் போட்டியின் வெற்றியை தீர்மானிக்க கூடிய அம்பயர்கள் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் அம்சத்திலும் ரிஷப் பண்ட் படுமோசமாக செயல்பட்டு வருகிறார். ஆம் முக்கியமான தருணத்தில் களத்தில் தவறான தீர்ப்பை அம்பயர் வழங்கும் போது அதை எதிர்த்து 10 நொடிக்குள் சரியான தீர்ப்பு எதுவாக இருக்கும் என்பதை கணித்து டிஆர்எஸ் எடுக்க வேண்டியதும் நவீன கிரிக்கெட்டில் ஒரு கேப்டனின் இன்றியமையாத கடமையாகும். அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஒரு கேப்டனாக இதுவரை அவர் எடுத்த 3 டிஆர்எஸ் முடிவுகளும் இந்தியாவுக்கு சாதகமாக அமையவில்லை.

இதையும் படிங்க : அவரோட பவுலிங்ல நெறைய ரன்ஸ் லீக் ஆகுது. அவருக்கு பதிலா அர்ஷ்தீப் சிங்கை சேருங்க – ரசிகர்கள் கோரிக்கை

அதைவிட முழுநேர கேப்டனாக அவர் வழிநடத்தும் டெல்லி அணிக்காக ஐபிஎல் 2021 மற்றும் 2022 தொடரில் எடுத்த 17 டிஆர்எஸ் ரிவியூக்களில் 13 முறை தீர்ப்பு அவருக்கு எதிராகவே அமைந்துள்ளது. வெறும் 3 முறை மட்டுமே சாதகமாக அமைந்தது. அவரின் டிஆர்எஸ் வெற்றி விகிதம் வெறும் 17.06% ஆகும். இப்படி அனைத்து கேப்டன்ஷிப் அம்சத்தில் மொத்தமாக சொதப்பும் ரிஷப் பண்ட் கடினமான தருணத்தில் ஒரு அணியை வெற்றிகரமாக வழிநடத்துவதில் தடுமாற்றமாகவே இருந்து வருகிறார். அந்த சுமாரான கேப்டன்ஷிப் அழுத்தம் அவரின் பேட்டிங்கையும் பாதிப்பதால் ஒரு அணியை வழிநடத்துவதற்கு இவர் சரிப்பட்டு வரமாட்டார் என்று தான் கூற தோன்றுகிறது.

Advertisement