அவரோட பவுலிங்ல நெறைய ரன்ஸ் லீக் ஆகுது. அவருக்கு பதிலா அர்ஷ்தீப் சிங்கை சேருங்க – ரசிகர்கள் கோரிக்கை

Avesh-Khan
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 4வது போட்டி இன்று இரவு ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் 2 க்கு 1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த நான்காவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணி தயாராகி வருவதால் அணியில் ஏதேனும் மாற்றம் இருக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

INDvsRSA

ஆனால் இந்திய அணியைப் பொறுத்தவரை எந்த ஒரு மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. ஏனெனில் முதல் மூன்று போட்டிகளிலும் எந்தவித மாற்றமும் இன்றி அதே பிளேயிங் லெவனுடன் விளையாடிய இந்திய அணியானது இன்றைய போட்டியிலும் அதே அணியுடன் தான் களமிறங்கும் என்று தெரிகிறது.

- Advertisement -

இருப்பினும் இன்றைய நான்காவது டி20 போட்டியில் முக்கிய மாற்றமாக அர்ஷ்தீப் சிங்கை அணியில் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் கோரிக்கை வலுத்து வருகிறது. ஏனெனில் இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகளில் புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல் மற்றும் சாஹல் என பந்து வீச்சில் சிறப்பாக ஒருபுறம் பவுலர்கள் செயல்பட்டாலும் ஆவேஷ் கானின் பந்துவீச்சில் பெரிய அளவில் விக்கெட்டுகள் கிடைக்கவில்லை.

அதேபோன்று அவருடைய ஓவரில் அதிக அளவு ரன்கள் கசிவதாலும், அவரது பந்து வீச்சை தென் ஆப்பிரிக்க வீரர்கள் சுலபமாக எதிர்கொண்டு அடிக்கின்றனர் என்பதனாலும் அர்ஷ்தீப் சிங்கை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று கூறி வருகின்றனர். ஏனெனில் ஐபிஎல் தொடரின்போது டெத் ஓவர்களில் மிகச்சிறப்பான பந்துவீச்சினை அர்ஷ்தீப் சிங் வெளிப்படுத்தியிருந்தார்.

- Advertisement -

அதோடு டெத் ஓவர்களில் பவுண்டரிகளை வழங்காமல் பந்துவீசும் அவர் குறைந்த அளவு ரன்களை மட்டுமே விட்டுக் கொடுக்கிறார். அதோடு பவுண்டரிகளை வழங்காமல் கட்டுக்கோப்பாக பந்துவீசும் அவரது இந்த சிறப்பான செயல்பாட்டின் காரணமாக இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பினை வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் என்று தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : என்கிட்ட உம்ரான் மாலிக் மாதிரி மிரட்டல் வேகம் இல்ல, அதான் விவேகத்தை பயன்படுத்துகிறேன் – ஸ்டார் வீரர் ஓபன்டாக்

இந்திய அணிக்காக கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயத்துக்குட்பட்டோர் உலககோப்பை அணியில் விளையாடியிருந்த அர்ஷ்தீப் சிங் அப்போதிலிருந்தே மிகச்சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தி வருகிறார். அதோடு ஐ.பி.எல் தொடரிலும் 2019 ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் அவர் 37 போட்டிகளில் விளையாடி 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement