என்கிட்ட உம்ரான் மாலிக் மாதிரி மிரட்டல் வேகம் இல்ல, அதான் விவேகத்தை பயன்படுத்துகிறேன் – ஸ்டார் வீரர் ஓபன்டாக்

Practice
- Advertisement -

கிரிக்கெட்டில் பந்துவீச்சில் துறையில் வேகப்பந்து வீச்சாளர்களின் வேலை சற்று கடினமானதாகும். ஏனெனில் முழுமூச்சுடன் வேகமாக ஓடி வந்து அதிவேகமாக பந்து வீசக்கூடிய அவர்களை பல தருணங்களில் அசால்டாக எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகளை அடித்து கடுப்பேற்றுவார்கள். மேலும் வேகமாக ஓடுவதால் சுழல் பந்துவீச்சாளர்களை விட அதிகமாக காயமடையும் வேகப்பந்து வீச்சாளர்கள் நீண்ட நாட்கள் விளையாடுவது கடினமாகும். அதையும் தாண்டி பிரட் லீ, சோயப் அக்தர், கிளன் மெக்ராத் போன்ற குறிப்பிட்ட சில வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே நீண்ட வருடங்கள் விளையாடி ஜாம்பவான்களாக பெயர் பெற்றுள்ளார்கள்.

lee 1

- Advertisement -

பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள் எந்த அளவுக்கு அதிவேகமாக பந்து வீசுகிறார்களோ அந்த அளவுக்கு பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தி விக்கெட்டுகள் எடுக்க முடியும். ஆனால் அம்மாதிரியான யுக்தி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வேண்டுமானால் சிறப்பாக இருக்கும். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பாதகத்தை ஏற்படுத்தி விடும். ஏனெனில் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் வேகத்தை விரும்புவார்கள் என்பதால் அதில் நல்ல லைன், லென்த், வேரியேஷன் போன்ற அம்சங்களை உட்புகுத்த தவறினால் சீக்கிரமே கிரிக்கெட்டிலிருந்து வேகப்பந்து வீச்சாளர்கள் காணாமல் போய்விடும் நிலை ஏற்படும்.

உம்ரான் வேகம்:
எடுத்துக்காட்டாக வருண் ஆரோன், நவ்டீப் சைனி போன்ற இந்திய பவுலர்களை கூறலாம். அந்த வகையில் தற்போது ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 22 வயது இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் சமீபத்திய ஐபிஎல் தொடரில் அசால்டாக 150க்கும் மேற்பட்ட வேகத்தில் பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களின் ஸ்டம்ப்களை தெறிக்க விட்டதை பார்த்தோம். அதன் காரணமாகவே குறுகிய காலத்தில் தற்போது நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்கும் அளவுக்கு பிரம்மாண்ட வளர்ச்சியும் கண்டுள்ளார்.

umran

ஆனால் வேகத்திற்கு ஈடாக நிறைய போட்டிகளில் ரன்களையும் வாரி வழங்கிய காரணத்தாலேயே இந்திய அணியில் இடம்பிடித்தும் இன்னும் அவருக்கு 11 பேர் அணியில் இடம் கிடைக்காமல் இருக்கிறது. அதனால் துல்லியமாக பந்துவீசி குறைவான ரன்களை கொடுக்கும் தரமான பந்து வீச உம்ரான் மாலிக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கபில் தேவ் உட்பட நிறைய ஜாம்பவான்கள் அவரைக் கேட்டுக் கொண்டுள்ளார்கள். அதை அவர் செய்தால் மட்டுமே இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்று நீண்ட நாட்கள் விளையாட முடியும் இல்லையேல் வந்த வேகத்திலேயே காணாமல் போவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

என்னால் முடியாது:
இந்நிலையில் உம்ரான் மாலிக் போன்ற அதிரடியான வேகத்தில் தம்மால் பந்து வீச முடியாது என்பதால் அதிகமான விவேகத்தை பயன்படுத்துவதாக வளர்ந்து வரும் இந்திய பவுலராக கருதப்படும் ஹர்ஷல் படேல் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையை சொல்ல வேண்டுமெனில் கடைசி 2 ஐபிஎல் தொடரில் நான் எவ்வாறு பந்துவீசுகிறேன் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் விரும்புகின்றனர். ஒவ்வொரு பவுலரும் நீண்ட நாட்கள் விளையாடினால் அந்த பவுலர் எப்படி பந்து வீசுகிறார், அவரின் பலம் – பலவீனம் என்ன என்பதை எதிரணியினர் கணித்து விடுவார்கள்”

Harshal

“ஒரு பவுலராக பேட்ஸ்மேன்களுக்கு ஒரு அடி முன்பாக இருக்க வேண்டியது எனது வேலை. போட்டி நாளன்று உங்களிடம் 15 திட்டங்கள் இருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட நாளில் ஏற்படும் அழுத்தத்தால் களத்தில் அந்தத் திட்டங்களை சரியாக செயல்படுத்த வில்லையெனில் எதுவும் சரியாக வராது. எனவே ஒவ்வொரு குறிப்பிட்ட தருணத்திலும் சிறந்த பந்தை சிறந்த முறையில் செயல்படுத்துவதில் நான் கவனம் செலுத்துகின்றேன். என்னால் எப்போதும் வேகத்தை கொண்டு வர முடியாது. அதுவும் உம்ரான் மாலிக் போல் வேகமாக பந்து வீச முடியாது என்பதால் சர்வதேச அளவில் என்னை திறம்பட வெளிப்படுத்தும் திறமைகளை நான் வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -

விவேகமான ஹர்ஷல்:
கடந்த 2012 ஐபிஎல் தொடரிலிருந்து விளையாடினாலும் யாரென்றே தெரியாத வகையில் சுமாராக செயல்பட்டு வந்த இவர் வேகத்தால் எந்த பயனுமில்லை இனிமேல் விவேகத்தை கையில் எடுத்தாக வேண்டும் என்று உணர்ந்து அதற்காக ஒரு சில நுணுக்கங்களை தீவிரமாகக் கற்றுக் கொண்டார். அதன் பயனாக கடந்த 2021 சீசனில் பெங்களூரு அணிக்காக வெறும் 20 லட்சத்துக்கு 15 போட்டிகளில் ஹாட்ரிக் உட்பட 32 விக்கெட்டுகளுடன் ஊதா தொப்பியை வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

harshal

குறிப்பாக பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகளை அடிக்கத் துடிக்கும் 16 – 20 போன்ற கடைசி கட்ட ஓவர்களில் துல்லியமாக பந்துவீசியதால் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்ற இவர் சமீப காலங்களில் ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோருடன் சேர்ந்து பந்துவீசும் 3-வது தரமான பவுலராக உருவெடுத்துள்ளார்.

இதையும் படிங்க : காயத்திற்கான சிகிச்சை எடுக்க ஜெர்மனி செல்லவுள்ள கே.எல் ராகுல் – அப்படி என்ன பிரச்சனை தெரியுமா?

சில தினங்களுக்கு முன்பு விசாகப்பட்டினத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த வாழ்வா – சாவா போட்டியில் கூட 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர் தற்சமயத்தில் இந்தியாவின் சிறந்த டெத் பவுவராக வலம் வருகிறார் என்று சச்சினே பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement