வெளிநாட்டு வீரர்கள் வரலனா என்ன? எஞ்சிய சீசனுக்கான புதிய ரூல்ஸ்ஸை கொண்டு வந்த நிர்வாகம் – விவரம் இதோ

BCCI and IPL
- Advertisement -

கடந்த மே 8-ம் தேதி தரம்சாலா நகரில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 58-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. அந்த போட்டியின் முதல் பத்து ஓவர்கள் முடிவடைந்த வேளையில் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு மைதானத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான அசாதாரண சூழல் காரணமாகவே இந்த போட்டி நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

எஞ்சியுள்ள தொடருக்கான புதிய விதியை அறிமுகப்படுத்திய பி.சி.சி.ஐ :

மேலும் ஐபிஎல் தொடரானது ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதன் பிறகு தற்போது நாடு முழுவதும் இருந்த பதட்டம் தணிந்துள்ளதை அடுத்து எஞ்சியுள்ள ஐபிஎல் தொடரை விரைவில் நடத்தி முடிக்க பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் மே 17-ஆம் தேதி மீண்டும் துவங்கும் இந்த ஐபிஎல் தொடரானது ஜூன் 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 6 நகரங்களில் மட்டுமே எஞ்சியுள்ள இந்த தொடரானது நடைபெறும் என்றும் இந்த தொடரின் எஞ்சியுள்ள 17 போட்டிகளில் விருப்பமுள்ள வீரர்கள் பங்கேற்கலாம் என்றும் பி.சி.சி.ஐ அறிவித்துவிட்டது.

ஏனெனில் இந்தியாவில் போர் பதற்றம் காரணமாக வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் நாடு திரும்பியுள்ள வேளையில் அவர்களில் பலரும் மீண்டும் இந்தியாவிற்கு திரும்ப வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஒருபுறம் இந்தியாவில் உள்ள சூழலை கணக்கில் கொண்டும் மற்றொருபுறம் சர்வதேச போட்டிகளின் அட்டவணை காரணமாகவும் வெளிநாட்டு வீரர்களால் இந்த தொடரில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த பிரச்சனை சமாளிக்க தற்காலிக விதியை பி.சி.சி.ஐ அறிமுகப்படுத்தியுள்ளது அந்த வகையில் ஒவ்வொரு அணியிலும் எத்தனை மாற்று வீரர்களை வேண்டுமானாலும் தற்காலிகமாக இணைத்துக் கொள்ளலாம் என பி.சி.சி.ஐ அனுமதித்துள்ளது. மேலும் இந்த தற்காலிக மாற்றுவீரர்களுக்கான அனுமதி இந்த ஆண்டு மட்டுமே நடைமுறையில் இருக்கும் அடுத்த ஆண்டு அவர்களால் தொடர்ந்து விளையாட முடியாது என்றும் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : சச்சினுக்கு அடுத்தவர்.. ஃபேப் 4இல் கோலி தான் எனக்கு அதை நெருப்பா கொடுத்தவர்.. ஆண்டர்சன் பாராட்டு

மீண்டும் ஐபிஎல் ஏலத்திற்கு சென்று வந்தால் தான் அவர்களால் உங்களது அணியில் இடம் பிடிக்க முடியும் என்றும் பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு அணியிலும் எத்தனை வெளிநாட்டு வீரர்கள் வரவில்லை என்றாலும் அவர்களுக்கு பதிலாக ஒவ்வொரு அணியும் தங்களுக்கு பிடித்தமான மாற்று வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement