சச்சினுக்கு அடுத்தவர்.. ஃபேப் 4இல் கோலி தான் எனக்கு அதை நெருப்பா கொடுத்தவர்.. ஆண்டர்சன் பாராட்டு

James Anderson 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகன் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடை பெற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. 2011இல் அறிமுகமான அவர் மொத்தம் 123 போட்டிகளில் விளையாடி 9230 ரன்களை எடுத்துள்ளார். தற்போது ஓய்வு பெற்றுள்ளதால் 10000 ரன்கள் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டுள்ள அவர் கேப்டனாக இந்தியாவுக்கு 40 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

அதன் வாயிலாக வெற்றிகரமான அவர் இந்திய மற்றும் ஆசிய கேப்டனாக சாதனை படைத்துள்ளார். மேலும் ஜேம்ஸ் ஆண்டர்சன், மிட்சேல் ஜான்சன் உள்ளிட்ட உலகின் அனைத்து டாப் பேட்ஸ்மேன்களுக்கும் சவாலைக் கொடுத்த விராட் கோலி இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். அத்துடன் ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருடன் சேர்த்து நவீன டெஸ்ட் கிரிக்கெட்டின் டாப் 4 தரமான பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும் விராட் கோலி பாராட்டுகளைப் பெற்றார்.

- Advertisement -

ஆண்டர்சன் பாராட்டு:

இந்நிலையில் பேப் 4 பேட்ஸ்மேன்களில் ஜோ ரூட் டாப் க்ளாஸ் பேட்ஸ்மேன் என்று இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டரசன் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த 4 பேட்ஸ்மேன்களில் விராட் கோலி தான் தமக்கு நெருப்பைப் போன்ற போட்டியைக் கொடுத்ததாகவும் அவர் பாராட்டியுள்ளார். அத்துடன் பேட்டிங்கில் சச்சின் டெண்டுல்கருக்கு பின் விராட் கோலி சிறந்தவர் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஆண்டர்சன் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி நம்ப முடியாதவர். இருப்பினும் ஜோ ரூட் அந்த நால்வரில் மேலே இருப்பார் என்று நான் சொல்வேன். ஏனெனில் அவரிடம் அனைத்து சூழ்நிலைகளிலும் தன்னை உட்படுத்திக் கொண்டு விளையாடும் திறன் இருக்கிறது”

- Advertisement -

சச்சினுக்கு கீழே:

“தன்னுடைய டெக்னிக்கில் அனைத்து நேரங்களிலும் மாற்றங்களை செய்த அவர் தன் மீது எறியப்படும் அனைத்துக்கும் தயாராக இருக்கிறார். ஆனால் அந்த 4 பேட்ஸ்மேன்களில் நெருப்பைப் போன்ற மிகவும் கடுமையான போட்டியையாளர் என்றால் அது கண்டிப்பாக விராட் கோலி என்று நினைக்கிறேன். கடந்தக் காலங்களில் எங்களிடம் இருந்த போட்டி நம்ப முடியாதது”

இதையும் படிங்க: 42 மாதம்.. இந்தியாவை மாபெரும் சக்தியா உருவாக்கிய விராட் கோலி.. இதான் ஓய்வாக காரணம்.. நாசர் ஹுசைன்

“அவர் களத்தில் நீங்கள் சண்டையிட விரும்பும் ஒரு பையன். அவர் தனது நிலைப்பாட்டில் எப்போதும் நங்கூரமாக நிற்பார். அவர் வெளிப்படையான ஒரு அற்புதமான வீரர். ஃபேப் 4 பேட்ஸ்மேன்கள் என்று சொல்வதைக் காட்டிலும் சச்சின் டெண்டுல்கருக்கு பின் விராட் கோலி கீழே இருப்பார்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement