சென்னையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான சிறப்பு அனுமதி – பி.சி.சி.ஐ யின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Chepauk
- Advertisement -

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை முடித்த இந்திய அணி அடுத்தாக தற்போது இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் என மிகப்பெரிய தொடரில் விளையாட உள்ளது. இதில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 5ம் தேதி சென்னையில் இன்று துவங்கியுள்ளது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மார்ச் 12ம் தேதி அகமதாபாத் மைதானத்திலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 23ம் தேதி புனே மைதானத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளனர். தற்போது முதலில் நடைபெறயிருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுயிருக்கிறது. இரு அணிகளிலும் பல்வேறு மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் அனுமதி இல்லை என்று தமிழக கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் ரசிகர்கள் இன்றி நடத்தப்படும் என்றும் அறிவித்தனர். ஆனால் தற்போது சென்னையில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.

Chepauk

இதனால் தமிழக கிரிக்கெட் சங்கம் பிசிசிஐயிடம் 50 % ரசிகர்களை அனுமதிக்க கோரி விண்ணப்பித்தது. இதன்பிறகு பிசிசிஐ ரசிகர்களுடன் இரண்டாவது போட்டியை நடத்த அனுமதி கொடுத்திருக்கிறது. தற்போதுசென்னையில் நடைபெற இருக்கும் 2வது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை விரைவில் தொடங்கும் என்று தமிழக கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளனர்.

பி.சி.சி.ஐ யின் இந்த அறிவிப்பினால் ரசிகர்கள் தற்போது ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கின்றனர். ஆனால் முதல் டெஸ்ட் போட்டி ரசிகர்கள் இன்றி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு போட்டிகள் நடைபெற இருப்பதால் ரசிகர்கள் மகிழியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement