ஐபிஎல் 2026: முஸ்தபிசூர் ரஹ்மானை அணியிலிருந்து தூக்குங்க.. கொல்கத்தாவுக்கு கெடு விதித்த பிசிசிஐ

Mushtafizur rahman
- Advertisement -

ஐபிஎல் 2026 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த மாதம் அபுதாபியில் நடைபெற்றது. அதில் வங்கதேசத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசூர் ரஹ்மான் 9.20 கோடிகள் என்ற பெரிய தொகைக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டிருந்தார். துல்லியமாக பந்து வீசக்கூடிய அவர் தங்களுடைய அணிக்காக விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டது கொல்கத்தா ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இந்நிலையில் கொல்கத்தா அணியிலிருந்து ரஹ்மானை விரைவில் கழற்றி விடுமாறு பிசிசிஐ கெடு விதித்துள்ளது. அதாவது இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையே தற்போது பதற்றமான சூழ்நிலையில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வங்கதேசத்தில் வாழும் இந்து மக்களை அங்குள்ளவர்கள் தாக்கி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

ரஹ்மானை தூக்குங்க:

சொல்லப்போனால் அந்த தாக்குதலில் சில மக்கள் இயற்கை எய்தியதாகவும் செய்திகள் வெளி வந்துள்ளன. இதற்கிடையே இந்தியாவில் விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அதற்கு பதிலடியாகவே வங்கதேசத்தில் இருக்கும் இந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது அதற்கு பதிலடியாக ஐபிஎல் தொடரில் வங்கதேசத்தை சேர்ந்த வீரர்கள் விளையாடக்கூடாது என்ற எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் ரஹ்மான் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். எனவே ஐபிஎல் தொடர் நடைபெறும் போது ரஹ்மான் கொல்கத்தாவுக்காக விளையாடினால் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக பிசிசிஐ கருதுகிறது.

- Advertisement -

கொல்கத்தாவுக்காக பிசிசிஐ கெடு:

அதனால் விரைவில் அவரை அணியிலிருந்து நீக்குகுமாறு கொல்கத்தா நிர்வாகத்தை பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா அறிவுறுத்தியுள்ளார். அதே சமயம் ரஹ்மானுக்கு பதிலாக தகுந்த மாற்று வீரரை கொல்கத்தா அணி வாங்குவதற்கு பிசிசிஐ அனுமதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: 2025இல் தள்ளி வைக்கப்பட்ட இந்திய அணியின் 20 தொடர்கள்.. 2026இல் அட்டவணை வெளியிட்ட வங்கதேசம்

“சமீபத்தில் நாடு முழுவதும் நடந்து வரும் சம்பவங்கள் காரணமாக வங்கதேச வீரர் முஸ்தபிசூர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவிக்குமாறு கொல்கத்தா நிர்வாகத்தை பிசிசிஐ அறிவுறுத்துகிறது. அவருக்கு பதில் மாற்று வீரர் யாரையாவது கேட்டால், அதை மாற்றிக் கொள்வதற்கு பிசிசிஐ அனுமதிக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறினார். இந்த அறிவிப்புக்கு வங்கதேச ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement