இந்திய கிரிக்கெட் அணி 2026 புத்தாண்டில் பல்வேறு தொடர்களில் விளையாட உள்ளது. அந்த வரிசையில் வங்கதேசத்துக்கு எதிராக 2025ஆம் ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட 2 தொடர்கள் இந்த வருடம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டின் 2வது பகுதியில் இந்திய அணி வங்கதேசத்துக்கு சென்று 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதாக இருந்தது.
ஆனால் அந்த சமயத்தில் வங்கதேசத்தில் உள்நாட்டில் பெரிய பிரச்சனை ஏற்பட்டது. அத்துடன் வங்கதேசத்திலிருந்து விதிமுறைகளை மீறி இந்தியாவில் குடியேறியவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் காரணமாக இந்தியா மற்றும் வங்கதேசம் நாடுகளுக்கு இடையேயான நட்புறவு பாதிக்கப்பட்டு பதற்றமான சூழ்நிலை உண்டானது.
2025இல் தள்ளிவைக்கப்பட்ட தொடர்கள்:
அதனால் 2025இல் வங்கதேசத்துக்கு செல்வதாக இருந்த இந்திய அணியின் சுற்றுப்பயணம் திடீரென தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நிலைமைகள் ஓரளவு சமூகமாகியுள்ளதால் இந்தியாவுக்கு எதிரான 2 தொடர்களையும் நடத்த முடிவெடுத்துள்ளதாக வங்கதேச வாரியம் அறிவித்துள்ளது. இது பற்றி வங்கதேச வாரியத்தின் செயல்பாடுகள் நிர்வாகி ஷாரியர் நபீஸ் கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு.
“இதற்கு முன் தள்ளி வைக்கப்பட்ட வங்கதேசம் மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான தொடர்கள் மீண்டும் திட்டமிடப்பட்டது. வங்கதேசத்தில் ஒரு உறுதிப்படுத்தப்பட்ட சர்வதேச பயணத்தின் பருவத்தை நாங்கள் உறுதி செய்கிறோம். அதனால் நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் தங்கள் வீட்டில் உயர்மட்ட கிரிக்கெட்டை பார்க்கும் வாய்ப்பை வழங்குவோம்”
2026இல் அறிவிப்பு:
“அதே சமயம் போட்டி நடைபெறும் இடம் மற்றும் மைதாங்கள் பின்னர் அறிவிக்கப்படும்” என்று கூறியுள்ளார். 2026 வங்கதேசத்தில் இந்திய அணி விளையாடும் தொடர்களின் அட்டவணை:
செப்டம்பர் 1: முதல் ஒன்டே
செப்டம்பர் 3: 2வது ஒன்டே
செப்டம்பர் 6: 3வது ஒன்டே
செப்டம்பர் 9: முதல் டி20
செப்டம்பர் 12: 2வது டி20
செப்டம்பர் 13: 3வது டி20
இதையும் படிங்க: 5வது ஓவர் வேணும்.. டி20யில் பேட்டிங், பவுலிங் சமமாக இந்த ரூல்ஸை மாத்தனும்.. அம்பயர் சைமன் பேட்டி
அந்த அறிவிப்பு இருநாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெறும் ஒருநாள் தொடர் 2027 உலகக் கோப்பைக்கு தயாராகும் நோக்கத்தில் நடைபெற உள்ளது. அதில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இந்திய அணிக்காக வங்கதேசத்தில் கடைசி முறையாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.



