அந்த வேதனை இருக்கே – சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை 99 ரன்களில் சதத்தை தவறவிட்ட பேட்ஸ்மேன்களின் பட்டியல்

sachin
Advertisement

டெஸ்ட், ஒருநாள், டி20 என எந்த வகையான போட்டியாக இருந்தாலும் கிரிக்கெட்டில் நாட்டுக்காக சர்வதேச அரங்கில் ஒவ்வொரு போட்டியிலும் களமிறங்கும் பேட்ஸ்மேன்களுக்கு சதமடிக்க வேண்டும் என்பதே லட்சியமாக இருக்கும். ஒரு பேட்ஸ்மேனுக்கு தாம் சதமடித்து நாட்டுக்கு வெற்றியை தேடி கொடுப்பதை தவிர வேறு மிகப்பெரிய சாதனை இருக்கவே முடியாது. ஆனால் அதை எதிரணியில் இருக்கும் தரமான பவுலர்கள் அவ்வளவு எளிதில் எடுக்க விடாமல் திறமையுடன் பந்துவீசி ஒவ்வொரு பந்திலும் அவுட் செய்வதற்கு முயற்சித்து கொண்டே இருப்பார்கள்.

virat

எனவே சதம் அடிப்பதற்கு அவர்களை மிஞ்சிய திறமையை வெளிப்படுத்த வேண்டிய பேட்ஸ்மென்கள் அதில் பாதியான அரை சதத்தை கடந்து 80 ரன்களை தாண்டி 90 ரன்களைக் கூட எளிதாக அடுத்து விடுவார்கள். ஆனால் 90 ரன்களை தொட்டு விட்டால் இவ்வளவு நேரம் கடினமாக உழைத்து சேர்த்த ரன்களை சதமாக மாற்றாமல் அவசரப்பட்டு அவுட்டாகி விடக்கூடாது என்ற லேசான சுயநலம் கலந்த பயம் தோன்றுவதால் பொறுமையாக பேட்டிங் செய்யலாம் என்ற எண்ணமே அவர்களுக்கு தேவையற்ற பதற்றத்தை இயற்கையாகவே ஏற்படுத்தும்.

- Advertisement -

99 வேதனை:
அந்த அழுத்தத்தை பெரும்பாலான சமயங்களில் தாண்டி சதமடிக்கும் பேட்ஸ்மேன்கள் ஒரு சில சமயங்களில் பதற்றத்தால் செய்யும் சொதப்பல்களால் தவறவிட்டு விடுவார்கள். அதிலும் 99 ரன்களில் இருக்கும் போது பெரிய ஷாட் அடித்து அவுட்டாகி விடுவோம் என்ற நோக்கத்தில் சிங்கிள் எடுக்கும்போது ரன் அவுட்டாவது, கேட்ச் கொடுத்து அவுட்டாவது போன்ற இருக்கும் அத்தனை வகையான அவுட்களில் ஏதேனும் ஒரு வகையில் அவுட்டாகி தங்களது மனதை உடைத்துக் கொள்வதுடன் பார்க்கும் ரசிகர்களின் மனதையும் உடைப்பார்கள். போதாகுறைக்கு அதுபோன்ற சமயங்களில் பதற்றமடையும் பேட்ஸ்மேன்களுக்கு அதிர்ஷ்டமும் கைகொடுக்க தவறுவதும் 99 ரன்களில் அவுட்டாவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

rohith 1

சில சமயங்களில் 99* ரன்களில் ஒன்று இன்னிங்ஸ் முடிந்து விடும் அல்லது எதிர்ப்புறம் பேட்ஸ்மேன்கள் காலியாகி விடுவார்கள் என்ற நிலைமையும் ஏற்டும். அப்படிப்பட்ட நிலையில் சதம் அடித்ததை கூட எளிதாக மறந்து விடலாம் ஆனால் 99 ரன்களில் அவுட்டானதை ஒரு பேட்ஸ்மென் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவுக்கு வேதனையைக் கொடுக்கும். அப்படிப்பட்ட வேதனையை சர்வதேச கிரிக்கெட்டில் அதிக அளவில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட முறை எதிர்கொண்ட பேட்ஸ்மேன்களின் பட்டியல் இதோ:

- Advertisement -

அலெஸ் ஹேல்ஸ் (2 முறை): நவீன கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் அதிரடி பேட்ஸ்மேனாக வலம் வரும் இவர் 2016இல் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு ஒருநாள் போட்டியில் 99 ரன்கள் எடுத்திருந்த போது விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

Alex-Hales

அதற்கு முன்பாக 2012இல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு டி20 போட்டியில் 99 ரன்களில் க்ளீன் போல்டட்டான அவர் டி20 கிரிக்கெட்டில் 99 ரன்களில் அவுட்டான முதல் பேட்ஸ்மேன் என்ற பெயரையும் பெற்றார்.

- Advertisement -

விரேந்தர் சேவாக் (2 முறை): 100, 200, 300 என எந்த வகையான சதமாக இருந்தாலும் அதை பவுண்டரி அல்லது சிக்சரை பறக்க விட்டு எட்டக்கூடிய இவர் 2010இல் இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பையில் 99 ரன்களில் இருந்தபோது இந்தியாவும் வெற்றி பெறும் தருணத்தில் இருந்ததால் சிக்ஸர் பறக்க விட்டு இந்தியாவையும் வெற்றி பெற வைத்து சதத்தையும் தொட்டார்.

- Advertisement -

ஆனால் அவர் சதமடிக்க கூடாது என்பதற்காக வேண்டுமென்றே சதி செய்த சுராஜ் ராண்டிவ் உட்பட இலங்கை வீரர்கள் நோபால் வீசியது டிவி ரிப்ளையில் தெரிந்ததால் 99* ரன்களுடன் சதமடிக்க முடியாமல் போனது ரசிகர்களுக்கு நன்றாக தெரியும். அதே இலங்கைக்கு எதிராக ஒரு மாதம் முன்பாக நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியிலும் 99 ரன்களில் வீரேந்திர சேவாக் ஆட்டமிழந்து 2 முறை 1 ரன்னில் சதத்தை தவறவிட்ட பேட்ஸ்மேனாக இந்த பட்டியலில் இடம் பிடிக்கிறார்.

சனாத் ஜெயசூரியா (2 முறை): இலங்கையின் அதிரடி தொடக்க வீரரான இவர் 2001இல் இந்தியாவுக்கு எதிராக கொழும்புவில் நடைபெற்ற ஒரு போட்டியிலும் 2003இல் ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் அந்த அணிக்கு எதிராக எதிரான போட்டியிலும் 99 ரன்களில் அவுட்டாகியுள்ளார்.

jones

டீன் ஜோன்ஸ் (2 முறை): கடந்த வருடம் மறைந்த ஆஸ்திரேலியாவின் நட்சத்திரம் டீன் ஜோன்ஸ் 1985இல் இலங்கைக்கு எதிராக அடிலெய்ட் மைதானத்தில் நடந்த போட்டியில் 99* (77) ரன்கள் எடுத்திருந்தபோது 50 ஓவர்கள் முடிந்ததால் சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இருப்பினும் 1989ஓல் நியூசிலாந்துக்கு எதிராக பர்த் மைதானத்தில் 99 ரன்களில் அவுட்டாகி சென்றார்.

ரிச்சி ரிச்சர்ட்சன் (3 முறை): வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி முன்னாள் வீரரான இவரும் 1985இல் சார்ஜாவில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 99* ரன்களில் அவுட்டாகாமல் இருந்த போதும் சதமடிக்க முடியவில்லை. ஆனால் 1989இல் நியூசிலாந்துக்கு எதிராகவும் 1991இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் 99 ரன்களில் அவுட்டானார்.

Misbah

மிஸ்பா-உல்-ஹாக் (3 முறை): பாகிஸ்தானின் முன்னாள் கேப்டனான இவர் 2017இல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் எதிர்ப்புறம் அனைத்து பேட்ஸ்மேன்ங்களும் அவுட்டானதால் 99* ரன்களில் அவுட்டாகாமல் இருந்தார். ஆனால் அதே தொடரின் அடுத்த போட்டியில் 99 ரன்களில் ஆட்டமிழந்தார். அதற்கு முன்பாக 2011இல் நியூசிலாந்துக்கு எதிராகவும் 99 ரன்களில் நடையைக் கட்டிய அவர் மொத்தம் 3 முறை சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.

சச்சின் டெண்டுல்கர் (3 முறை): பதற்றம், ஸ்டீவ் பக்னர் போன்ற குருட்டுத்தனமான அம்பயர்கள் போன்றவற்றால் 17 முறை 90களில் அவுட்டான இவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை 90களில் அவுட்டான பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளார். அதையும் சேர்த்தால் 117 சதங்கள் அடித்திருப்பார் என்பது வேறு கதை. ஆனால் 2007இல் 6 மாதங்களுக்குள் 3 முறை 99 ரன்களில் அவுட்டானதை ரசிகர்கள் மறக்க முடியாது.

Sachin-1

முதலில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான பெல்பாஸ்ட் மைதானத்திலும் அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக ப்ரிஸ்டோல் மைதானத்திலும் பாகிஸ்தானுக்கு எதிராக மொகாலியிலும் 3 ஒருநாள் போட்டிகளில் 99 ரன்களில் அவுட்டாகி 3 சதங்களை விட்டதை நாம் மறந்தாலும் நிச்சயம் அவர் மறந்திருக்க முடியாது.

ஜெப்ரி பாய்காட் (3 முறை): இங்கிலாந்தின் ஜாம்பவானான இவர் 1974இல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு டெஸ்டில் 340 பந்துகளை எதிர்கொண்டு 99 ரன்களில் அவுட்டாகி உலகிலேயே 99 ரன்களில் அவுட்டான முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்தார். ஆனால் 1979இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் நகரில் நடந்த போட்டியில் எதிர்ப்புறம் இருந்த பேட்ஸ்மேன்கள் அவுட்டானதால் 99* ரன்களில் அவுட்டாகாமல் இருந்த இவர் 1980இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மீண்டும் ஓவல் மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் 99 (159) ரன்களில் ஆட்டமிழந்தார்.

Advertisement