நான் பந்துவீசினால் விக்கெட்டுகள் எளிதில் கிடைக்க காரணம் இதுதான் – ரஷீத் கான் வெளிப்படை

- Advertisement -

மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வெற்றிகரமான 2-வது வாரத்தைக் கடந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாக துவங்கிய இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. இதில் வரும் மே 22-ஆம் தேதி வரை நடைபெறும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டு புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

gt

- Advertisement -

இந்த தொடரில் புதிய அணிகளாக விளையாடி வரும் லக்னோ மற்றும் குஜராத் கூட அடுத்தடுத்த வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் டாப் இடங்களில் ஜொலிக்கும் நிலையில் நிறைய கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணிகளாக சாதனை படைத்துள்ள மும்பை மற்றும் சென்னை போன்ற அணிகள் இதுவரை ஒரு வெற்றிகளை கூட பதிவு செய்ய முடியாமல் புள்ளி பட்டியலில் அடிப்பகுதியில் திண்டாடுவது அனைவருக்கும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

கலக்கும் குஜராத்:
அந்த வகையில் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்த வருடம் முதல் முறையாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் தனது முதல் 3 போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு அடுத்தடுத்த வெற்றிகளுடன் ஹாட்ரிக் வெற்றிகளை பதிவு செய்தது. அந்த நிலையில் தனது 4-வது போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொண்ட நிலையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அந்த அணி முதல் முறையாக தோல்வியை பதிவு செய்தது. இருப்பினும் கூட 6 புள்ளிகள் பெற்றுள்ள அந்த அணி தற்போது புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் நல்ல நிலையில் இருந்து வருகிறது.

Rashid Khan 2

அந்த அணியில் பேட்டிங்கைவிட பந்துவீச்சு பலமாக உள்ளது என்றே கூறலாம். ஏனெனில் பேட்டிங்கில் சுப்மன் கில் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகியோரைத் தவிர வேறு வீரர்கள் பெரிய ரன்களை அடிக்கவில்லை என்றாலும் அதை அந்த அணியின் பலமான பந்துவீச்சு அதை ஈடுகட்டி அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வருகிறது. அதிலும் வேகப்பந்து வீச்சில் கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் முகமது சமி மற்றும் லாக்கி பெர்குசன் ஆகியோர் எதிரணிகளை மிரட்ட சுழல்பந்து வீச்சில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த உலகின் நம்பர் ஒன் டி20 பந்து வீச்சாளரான ரசித் கான் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் பவுலராக வலம் வருகிறார்.

- Advertisement -

மிரட்டல் ரசித் கான்:
ஆப்கானிஸ்தானை சேர்ந்த இவர் கடந்த பல வருடங்களாக ஐபிஎல் மட்டுமல்லாது உலக அளவில் நடைபெறும் அத்தனை டி20 தொடர்களிலும் தவறாமல் அட்டனன்ஸ் போடுவது மட்டுமல்லாமல் அந்தந்தக் காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அற்புதமாக செயல்பட்டு வெற்றிகளை தேடித் தருகிறார். இதனால் இவர் உலக அளவில் தன்னை நம்பர் ஒன் டி20 பந்துவீச்சாளராக நிரூபணம் செய்துள்ளார். அதன் காரணமாகவே 15 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு குஜராத் அணி அவரை வாங்கிய நிலையில் தற்போது அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக அவரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சமீப காலங்களாக தனது பந்துவீச்சை தைரியமாக எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் யோசிப்பதாக ரசித் கான் தெரிவித்துள்ளார்.

Rashid

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த தொடரில் இதுவரை சிறப்பாக செயல்பட்டு வருவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நான் எப்போதும் முடிவுகளின் மீது கவனம் செலுத்தாமல் தற்போதைய நிலைமையில் நான் எவ்வாறு பந்து வீசுகிறேன் என்பதை பற்றி யோசிப்பேன். அத்துடன் எதிரணியினரும் எனக்கு எதிராக ரிஸ்க் எடுத்து விளையாட யோசிப்பதால் நிறைய விக்கெட்டுகளைக் என்னால் எடுக்க முடிகிறது. ஒரு பவுலராக ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக யாரையும் அவுட் செய்வேன்” என கூறினார்.

- Advertisement -

தரமான ரசித்:
அவர் கூறுவது போல தனது அபார திறமையால் உலகின் அனைத்து இடங்களிலும் மிக சிறப்பாக செயல்பட்டு தன்னை உலகத்தரம் வாய்ந்த பவுலர் என நிரூபித்த அவரை ஆண்ட்ரே ரசல், பொல்லார்ட் என எந்த அதிரடி பேட்ஸ்மேனாக இருந்தாலும் அதிரடியாக எதிர் கொள்வதற்கு சற்று பயந்து யோசிக்கிறார்கள். அதற்கேற்றார்போல் இதுவரை 80 ஐபிஎல் போட்டிகளில் 99 விக்கெட்களை 6.34 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்துள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் மிக துல்லியமாக பந்து வீசி வரும் பவுலர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : 20 போட்டிகள் தான், அதற்குள் பட்டாசாக வெடித்த 5 பேட்ஸ்மேன்களின் பட்டியல் இதோ

இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரில் எனது புள்ளி விவரங்களை நீங்கள் பார்க்கும் போது எப்போதுமே நான் மெதுவாக தொடங்குவதை அறியமுடியும். நான் எப்போதும் முதல் 4 – 5 போட்டிகளில் 12 – 13 விக்கெட்டுக்கு பதிலாக வெறும் 5 – 6 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருப்பேன். எனவே எப்போதுமே என்னை நானே முன்னேற்றமடைய தொடர்ந்து முயற்சித்து வருகிறேன்” என கூறினார்.

Advertisement