- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியா மிஸ் பண்ணப் போறாங்க.. ஆஸி மண்ணில் ஹாட்ரிக் வெற்றிக்கு அவர் தேவை.. பசித் அலி பேட்டி

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு 2024/25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. 5 போட்டிகள் கொண்ட அந்தத் தொடர் வரும் நவம்பர் மாதம் துவங்குகிறது. அந்தத் தொடரிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஹாட்ரிக் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

ஏனெனில் காலம் காலமாக ஆஸ்திரேலிய மண்ணில் சந்தித்த தோல்விகளை விராட் கோலி தலைமையில் 2018/19 தொடரில் மாற்றிய இந்தியா முதல் முறையாக தொடரை வென்று சாதனை படைத்தது. அதன் பின் 2020/21 தொடரின் முதல் போட்டியிலேயே 36க்கு ஆல் அவுட்டான இந்தியா படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும் அங்கிருந்து ரகானே தலைமையில் அபாரமாக கம்பேக் கொடுத்த இந்தியா 2 – 1 (4) என்ற கணக்கில் மீண்டும் கோப்பையை வென்றது.

- Advertisement -

மிஸ் பண்ணுவாங்க:
இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றி பெற செட்டேஸ்வர் புஜாரா இந்திய அணியில் விளையாட வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி கூறியுள்ளார். ஏனெனில் அதிக பந்துகளை எதிர்கொண்டு ஆஸ்திரேலிய பவுலர்களை கலைப்படையை வைக்கும் திறமை புஜாராவிடம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போதைய நிலைமைப்படி அவரை கழற்றி விட்டால் அந்த பாரம் விராட் மற்றும் ரோஹித் ஆகிய சீனியர்கள் மீது விழும் என்று தெரிவிக்கும் பசித் அலி இது பற்றி பேசியது பின்வருமாறு. “துலீப் கோப்பையில் ரஹானே, புஜாரா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இது அடுத்ததாக நடைபெறும் வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படப் போவதில்லை என்பதற்கான சமிக்கையாக தெரிகிறது”

- Advertisement -

“இருப்பினும் புஜாரா இல்லாமல் இந்திய பேட்டிங் வரிசை ஆஸ்திரேலியாவில் பிரச்சனையை சந்திக்கும். ஒருவேளை புஜாராவும் இருந்தால் ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றிகளை பெற இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு இருக்கும். ஒருவேளை புஜாரா ஆஸ்திரேலியாவுக்கு செல்லவில்லையெனில் இந்திய பேட்டிங் பெரும்பாலும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்றவர்களை அதிகமாக சார்ந்திருக்க வேண்டும்”

இதையும் படிங்க: 90ஸ்லயே பண்ணிட்டோம்.. பஸ்பால் வெறும் ஃபப்ளிசிட்டி.. இதை செஞ்சா தோற்கடிக்கலாம்.. இலங்கைக்கு ஜெயசூர்யா அட்வைஸ்

“5 – 0, 4 – 1, 3 – 2, 2 – 2 என அத்தொடரின் முடிவு எதுவாக இருந்தாலும் இந்தியா புஜாராவை மிஸ் செய்வார்கள். ஏனெனில் அவர் எதிரணி பவுலர்களை களைப்படையை வைத்து எதிர்ப்புறம் இருக்கும் பேட்ஸ்மேன் மறுபுறம் ரன்கள் குவிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய வீரர்” என்று கூறினார். அவர் கூறுவது போல 2018/19 ஆஸ்திரேலிய தொடரில் தொடர்நாயகன் விருது வென்ற புஜாரா 2020/21 தொடரில் பாறையைப் போல உடம்பில் அதிக பந்துகளை எதிர்கொண்டு அடிவாங்கி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -