- Advertisement -
இந்திய கிரிக்கெட்

படிப்பறிவில்லாத பாக் நிர்வாகிகள்.. இந்தியாவை பாத்து இதை விஷயத்தை செஞ்சாவே முன்னேறிடலாம்.. பசித் அலி விளாசல்

வங்கதேசத்துக்கு எதிராக தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் 1 – 0* (2) என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. மேலும் பாகிஸ்தானை போல வீழ்த்துவோம் என்று சவால் விடுத்த வங்கதேசத்துக்கு ஆரம்பத்திலேயே இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.

இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சென்னையில் பிசிசிஐ தரமான பிட்ச் அமைத்திருந்ததாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி தெரிவித்துள்ளார். அதைப் பயன்படுத்தி இந்திய அணியினர் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்றதாக அவர் பாராட்டியுள்ளார். எனவே பிட்ச் எப்படி இருக்க வேண்டும் என்பதை பாகிஸ்தான் வாரியத்தில் உள்ள படிப்பறிவு இல்லாதவர்கள் இந்தியாவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என பசித் அலி சாடியுள்ளார்.

- Advertisement -

பசித் அலி விளாசல்:

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்தார். அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளை பதிவு செய்தார். இதுவே இந்தியாவின் 20 விக்கெட்டுகள் கணக்காகும். அவர்களின் பவுலர்கள் அனைத்து கட்டங்களையும் நிரப்பினர்”

“பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதை அறிந்து இந்தியா 2 ஸ்பின்னர்களை பயன்படுத்தியது. அவர்கள் கணிப்பு கடைசியில் நடந்தது. இதற்கான பாராட்டுக்கள் ஒரு டெஸ்ட் போட்டியின் ஆடுகளம் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து செயல்பட்ட மைதானப் பராமரிப்பாளருக்கு கொடுக்க வேண்டும். அவர்கள் எங்களைப் போல் இல்லை. இங்கே நான் கோபத்துடன் இருக்கிறேன்”

- Advertisement -

பாகிஸ்தான் முன்னேற:

“ஏனெனில் எங்கள் நாட்டில் பிட்ச்சுக்கு எந்த மதிப்பும் இல்லை. அவர்கள் படிப்பறிவில்லாதவர்கள். கிரிக்கெட்டை பெருமையுடன் விளையாடிய சிலர் பாகிஸ்தான் வாரியத்தில் இருக்கின்றனர். அப்படி இருந்தும் இவ்வாறு நடப்பது எனக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் குழந்தைகளுக்கு எதை கற்றுக் கொடுக்கிறீர்கள்? பிட்ச்சை சரியாக அமைத்து படித்தாலே 50% பிரச்சனைகள் சரியாகி விடும்”

இதையும் படிங்க: வீழ்த்த முடியல.. அதுல ராக்கெட் போல அசத்தும் ஜடேஜாவை பாத்து பொறாமைப்பட்டு இதை கத்துக்கிறேன்.. அஸ்வின்

“வேண்டுமானால் சுனில் கவாஸ்கர் மற்றும் மியான்தத்திடம் கேட்டுப் பாருங்கள். ஆனால் பாகிஸ்தான் வாரியம் இதை புரிந்து கொள்ளாது” என்று கூறினார். அவர் கூறுவது போல சமீப காலங்களில் பாகிஸ்தானில் உள்ள பிட்ச்கள் தார்ட் ரோட் போல தரமாக இல்லை. அதை பயன்படுத்தி இங்கிலாந்து முதல் வங்கதேசம் வரை பெரும்பாலான வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து வெற்றியை பெறுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -