நம்பர் ஒன் இந்தியா செய்றதெல்லாம் 3ம் தரம் வேலை.. இதே ஜெய் ஷா’ன்னா பாகிஸ்தான் விடுமா? பசித் அலி கேள்வி

Basit Ali 2
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்து இந்தியா 9 முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அத்தொடர் முழுவதுமே பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி கை கொடுக்காமல் வெளியேறியது. குறிப்பாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நிகழ்த்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் இயற்கை எய்தினார்கள்.

அதற்கு பதிலடியாக ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுடன் கை கொடுக்காத இந்தியா அந்த அணியை 3 முறை தோற்கடித்து கோப்பையை வென்றது. அப்போட்டியின் முடிவில் பாகிஸ்தான் வாரியத் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் மோசின் நக்வி தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இருப்பினும் பாகிஸ்தானை சேர்ந்த அவருடைய கைகளால் கோப்பையை வாங்க மாட்டோம் என்று இந்திய அணி மறுத்து விட்டது.

- Advertisement -

நம்பர் ஒன் இந்தியா:

அதனால் ஏமாற்றமடைந்த அவர் இந்தியா எப்படி வெற்றியைக் கொண்டாடுகின்றனர் என்பதைப் பார்ப்பதற்காக கையோடு கோப்பையை எடுத்துச் சென்றார். மறுபுறம் ஆசியக் கவுன்சில் தலைவராகவும் இருக்கும் அவர் வேறு யாரிடமாவது கொடுத்து கோப்பையைக் கொடுப்பார் என்று இந்திய அணியினர் காத்திருந்தனர். இறுதியில் இந்திய அணி கோப்பையை வாங்க மறுத்ததால் கொடுக்கவில்லை என்று ஆசிய கவுன்சில் சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதற்காக பிசிசிஐ அதிகாரிகளிடம் மோசின் மன்னிப்பு கேட்டதாக செய்திகள் வந்தன. ஆனால் அதை மறுத்துள்ள அவர் தன்னுடைய செயலுக்காக இந்தியாவிடம் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று கூறியுள்ளார். மேலும் கோப்பை வேண்டுமெனில் இந்திய கேப்டன் சூரியகுமார் துபாயில் இருக்கும் ஆசியக் கவுன்சில் அலுவலகத்தில் வந்து தன்னுடைய கையால் வாங்கிக் கொள்ளலாம் என்றும் நக்வி அறிவித்துள்ளார்.

- Advertisement -

3ஆம் தரம் வேலை:

இந்நிலையில் இந்த விவகாரத்தில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி இந்தியாவை விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் ஏஆர்ஒய் செய்தியில் பேசியது பின்வருமாறு. “இந்தியா நம்பர் ஒன் அணி. ஆனால் அவர்களுடைய செயல்கள் மூன்றாம் தரமானதாக இருக்கிறது. மோசின் நக்வி கோப்பையை வழங்குவார். அதை ஏற்றுக்கொள்ள மறுத்தால் இந்த உலகின் பார்வையில் இந்தியா இழிவுபடுத்தப்படுவார்கள்”

இதையும் படிங்க: இனிமேல் இந்தியாவில் எந்த போட்டியும் 2 நாளில் முடியாது.. இலங்கை வெச்சு நியூஸிலாந்து ஜெய்ச்சுட்டாங்க.. கில் பேட்டி

“அவர்களிடம் கோப்பையை வழங்கக்கூடாது. நம்பர் ஒன் அணியாக இருக்கும் நீங்கள் சிறப்பாக விளையாடி வென்றீர்கள். ஆனால் பிடிவாதம் எதற்கு? மோசின் ஆசிய கவுன்சில் தலைவராக இருக்கிறார். ஒருவேளை ஆசியக் கோப்பை ஐசிசி நடத்தும் தொடர் என்று வைத்துக் கொள்வோம். அதில் பாகிஸ்தான் வென்று ஐசிசி தலைவர் ஜெய் ஷா கைகளால் கோப்பையை வாங்க மாட்டோம் என்று சொன்னால், அது தவறானது” என்று கூறினார்.

Advertisement