- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பும்ரா தலைமையில் மிரட்டிய இந்தியா.. இப்போ திணற அந்த 2 பெரும் ஒன்னா இல்லாததே காரணம்.. பசித் அலி

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அதன் வாயிலாக ஆஸ்திரேலியாவில் ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தங்களுடைய பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.

ஆனால் 2வது போட்டியில் ரோகித் தலைமையில் மோசமாக விளையாடிய இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்து தொடரை சமன் செய்தது. அடுத்ததாக காபா மைதானத்தில் நடைபெறும் 3வது போட்டியிலும் இந்தியா தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. இத்தனைக்கும் முதல் போட்டியில் வென்ற இந்திய அணியில் அடுத்த 2 போட்டிகளில் பெரிய மாற்றங்கள் நிகழ்த்தப்படவில்லை.

- Advertisement -

ரோஹித் தலைமையில் திணறல்:

அப்படி இருந்தும் இந்தியா இவ்வளவு மோசமாக விளையாடுவது ஏன்? என்று ரசிகர்கள் ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். இந்நிலையில் இந்தியாவின் இந்த தடுமாற்றத்திற்கு கௌதம் கம்பீரும் ரோஹித் சர்மாவுக்கும் இடையே முரண்பாடு இருப்பதே காரணம் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி தெரிவித்துள்ளார். அதற்கான காரணங்கள் பற்றி அவர் விவரித்தது பின்வருமாறு.

“கடந்த இலங்கை, வங்கதேசம் தொடர்களில் ரோஹித் சர்மாவும் கௌதம் கம்பீரும் ஒரே பக்கத்தில் இல்லை. பின்னர் நடைபெற்ற நியூஸிலாந்து தொடரிலும் அவர்கள் ஒன்றாக இல்லை. 2, 3வது ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டிகளிலும் அவர்கள் ஒன்றாக இல்லை. ஆனால் ராகுல் டிராவிட் – ரோஹித் சர்மா ஆகியோர் ஒரே பக்கத்தில் இருந்தார்கள். இதை நான் எளிதாக விளக்குவேன்”

- Advertisement -

ஒன்னா இல்லை:

“இதுவரை நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளிலும் 3 வெவ்வேறு ஸ்பின்னர்கள் இந்தியாவுக்காக விளையாடினர். முதல் 2 போட்டிகளில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அவர்கள் 3வது போட்டியில் பந்து வீசுகிறார்கள். ஆஸ்திரேலிய அணியில் 3 இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கும் நிலையில் ஏன் வாஷிங்டன் சுந்தர் அல்லது அஸ்வின் விளையாடவில்லை? கிரிக்கெட்டைப் பற்றி நன்றாக புரிந்தவர்கள் இதை பேசுவார்கள்”

இதையும் படிங்க: இந்திய அணியில் இடம் இல்லனா என்ன? 2 கோப்பைகளுடன் கெத்து காட்டும் ஷ்ரேயாஸ் ஐயர் – விவரம் இதோ

“3வது போட்டியில் முதலில் பந்து வீசியது சரி என்று எனக்குத் தோன்றவில்லை. மொத்த இந்திய அணியும் பும்ராவை மட்டும் நம்பியிருக்கிறது. டிராவிஸ் ஹெட் இந்தியாவுக்கு எதிராக இருப்பது போல ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பும்ரா இருக்கிறார். ரோஹித், கம்பீர், மோர்கெல் போன்ற யாருமே இந்த பிரச்சனையை தீர்க்க முடியாது. அதே போல இடது கை வேகப்பந்து வீச்சாளரை தேர்ந்தெடுக்காததும் பலவீனத்தை கொடுத்துள்ளது. அதை சமாளிப்பதற்காகவே ஹெட்டுக்கு எதிராக ஜஸ்ப்ரித் பும்ரா ரவுண்டு தி விக்கெட் திசையில் வீசுகிறார்” என்று கூறினார்.

- Advertisement -