
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. ஆனால் அந்த தொடரில் பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. ஏனெனில் எல்லைப் பிரச்சினை காரணமாக 2008க்குப்பின் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை நிறுத்தியுள்ள இந்தியா ஐசிசி மற்றும் ஆசிய கோப்பைகளில் மட்டுமே மோதி வருகிறது.
அத்துடன் 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்றது. ஆனால் பாகிஸ்தானுக்கு சென்று அத்தொடரில் விளையாடாத இந்தியா தங்களுடைய போட்டிகளை இலங்கையில் விளையாடி வெற்றி பெற்றது. அதே போல 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளையும் துபாய் அல்லது இலங்கையில் நடத்துமாறு ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில் 2025 ஆசியக் கோப்பை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றுள்ளது.
ஒரே கல்லில் 3 மாங்காய்:
அதனால் 1990/91ஆம் ஆண்டுக்குப் பின் 34 வருடங்கள் கழித்து இந்தியாவில் ஆசிய கோப்பை நடைபெற உள்ளது. இந்நிலையில் 2025 ஆசிய கோப்பையை இந்தியாவில் நடத்தி ஒரே கல்லில் 2 பறவையை அடிக்க பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா முயற்சிப்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி தெரிவித்துள்ளார். ஆனால் 2025 சாம்பியன்ஸ் ட்ராபிக்கு நாட்டுக்கு வராமல் போனால் இந்தியாவில் நடக்கும் 2025 ஆசிய கோப்பையிலும் 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாட பாகிஸ்தானும் வராது என்று அவர் எச்சரித்துள்ளார்.
அதை தவிர்க்க 2025 ஆசிய கோப்பையை இந்தியாவுக்கு வெளியே பொதுவான இடத்தில் ஜெய் ஷா நடத்த வேண்டும் என்று அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “வெல்டன் ஜெய் ஷா நீங்கள் 1 கல்லில் 2 பறவையை அடித்துள்ளீர்கள். ஆனால் பசித் அலி ஒரு கல்லில் 3 பறவையை அடிப்பேன்”
“அதாவது ஆசிய கோப்பையை வேறு நாட்டுக்கு நகர்த்துமாறு உங்களுக்கு இலவச ஆலோசனை வழங்குகிறேன். சாம்பியன்ஸ் டிராபிக்கு விளையாட வரவில்லையெனில் பாகிஸ்தான் 2025 கோப்பைக்கு வராது என்பது அவருக்குத் தெரியும். சொல்லப்போனால் சாம்பியன்ஸ் ட்ராபிக்கு வரவில்லையெனில் பாகிஸ்தான் 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாட இந்தியாவுக்கு செல்ல மாட்டார்கள்”
இதையும் படிங்க: தன்னை பிரிந்து முதல் பிறந்தநாள் கொண்டாடும் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி – ஹார்டிக் பாண்டியா நெகிழ்ச்சி
“அதே சமயம் இந்தியா ஹைப்ரிட் மாடலை ஆசியக் கோப்பையிலும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபியிலும் உருவாக்க வாய்ப்புள்ளது. ஜெய் ஷா மிகவும் கூர்மையானவர் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அவருக்கு எதிர்புறத்தில் உள்ள பாகிஸ்தான் வாரியத் தலைவரும் கூர்மையானவர். தற்போது நீங்கள் ஆசிய கோப்பை இந்தியாவில் நடைபெறும் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளீர்கள். அதே போல பாகிஸ்தானுக்கு சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட இந்தியா செல்லும் என்பதையும் வெளிப்படையாக அறிவித்து விடுங்கள்” என்று கூறினார்.