8 விக்கெட்ஸ்.. இலங்கையை சொந்த மண்ணில் சாய்த்த வங்கதேசம் பதிலடி.. வரலாறு காணாத புதிய வெற்றி

Bangladesh 2025
- Advertisement -

இலங்கைக்கு சுற்றுப்பயணம் வங்கதேசம் 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது. அதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1 – 0 என்ற கணக்கில் வென்ற இலங்கை அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரையும் 2 – 1 என்ற கணக்கில் வென்றது. இறுதியாக நடைபெற்ற டி20 தொடரின் முதல் போட்டியிலும் இலங்கை எளிதாக வென்றது.

அதனால் டி20 தொடரிலும் வங்கதேசம் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2வது போட்டியில் இலங்கையை 94 ரன்களுக்கு சுருட்டி வீசிய வங்கதேசம் 83 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதைத்தொடர்ந்து வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி போட்டி ஜூலை 16ஆம் தேதி கொழும்புவில் நடைபெற்றது.

- Advertisement -

வங்கதேசம் அசத்தல்:

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் போராடி 132/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பதும் நிசாங்கா 46, சனாகா 35*, கமிண்டு மெண்டிஸ் 21 ரன்களை எடுத்தார்கள். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே எடுத்தனர். வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக மெஹிதி ஹசன் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

அடுத்து விளையாடிய வங்கதேசத்திற்கு பர்வேஸ் எமோன் ஆரம்பத்திலேயே துசாரா வேகத்தில் கோல்டன் டக் அவுட்டானார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் தன்ஜித் ஹசன் அதிரடியாக விளையாடினார். எதிர்ப்புறம் வந்த கேப்டன் லிட்டன் தாஸ் 32 (26) ரன்கள் குவித்து கமிண்டு மெண்டிஸ் பந்தில் அவுட்டானார். ஆனால் இந்தப் பக்கம் தொடர்ந்து அசத்திய ஹசன் அரை சதத்தை எடுத்து 73* (47) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

வரலாறு காணாத வெற்றி:

அவருடன் டௌஹித் ஹ்ரிடாய் 27* (25) ரன்களை எடுத்ததால் 16.3 ஓவரிலேயே 133/2 ரன்கள் எடுத்த வங்கதேசம் 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அதனால் 2 – 1 (3) என்ற கணக்கில் இலங்கையை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்த வங்கதேசம் கோப்பையை வென்றது. இதன் வாயிலாக வரலாற்றில் இலங்கை மண்ணில் முதல் முறையாக ஒரு டி20 தொடரை வென்று வங்கதேசம் புதிய சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: இந்த தோல்வி இன்னும் எங்களை வலிமையாக மாற்றும்.. லார்ட்ஸ் தோல்வி குறித்து கே.எல் ராகுல் – உருக்கமான பதிவு

அந்த வகையில் வரலாறு காணாத வெற்றி பெற்ற வங்கதேசம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் சந்தித்த தோல்விகளுக்கு இலங்கைக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். அதனால் லிட்டன் தாஸ் தலைமையில் டி20 தொடரை வென்று இலங்கை சுற்றுப்பயணத்தை வங்கதேசம் வெற்றிகரமாக நிறைவு செய்தது. மறுபுறம் இலங்கை சொந்த மண்ணில் முதல் முறையாக வங்கதேசத்திடம் டி20 தொடரில் அவமானத் தோல்வியை சந்தித்தது.

Advertisement