510 ரன்ஸ்.. 42/5 என திணறல்.. வங்கதேசத்தை சொந்த ஊரில் 3 நாளாக வெச்சு செய்த இலங்கை ஜோடி 2 வரலாற்று சாதனை

BAN vs SL
- Advertisement -

வங்கதேசம் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 22ஆம் தேதி சில்ஹெட் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை போராடி 280 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு மதுசங்கா 2, கருணரத்னே 17, குசால் மெண்டிஸ் 16, மேத்யூஸ் 5, சந்திமால் 9 என முக்கிய வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் 57/5 என திணறிய இலங்கையை 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 202 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் போட்ட கேப்டன் தனஞ்ஜெயா டீ சில்வா சதமடித்து 102, கமிண்டு மெண்டிஸ் சதமடித்து 102 ரன்கள் அடித்து காப்பாற்றினர். வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக கலீத் அகமது, நகித் ராணா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 188 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

சாதனை ஜோடி:
அதிகபட்சமாக டைஜூல் இஸ்லாம் 47 ரன்கள் எடுக்க இலங்கை சார்பில் அதிகபட்சமாக விஸ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 92 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இலங்கைக்கு கருணரத்னே 52 ரன்கள் எடுத்தார். ஆனால் அவரை தவிர்த்து மதுசங்கா 10, குஷால் மெண்டிஸ் 3, மேத்யூஸ் 22, சந்திமால் 0 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

அதனால் 126/6 என தடுமாறிய இலங்கையை மீண்டும் மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்து 7வது விக்கெட்டுக்கு 173 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் காப்பாற்றிய கேப்டன் டீ சில்வா சதமடித்து 108 ரன்களும் கமிண்டு மெண்டிஸ் அற்புதமான சதமடித்து 164 ரன்களும் குவித்தனர். வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக மெஹந்தி ஹசன் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அந்த வகையில் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் டீ சில்வா 6வது இடத்திலும் மெண்டிஸ் 7வது இடத்திலும் களமிறங்கி சதமடித்தனர்.

- Advertisement -

அதே போல 2வது இன்னிங்ஸில் டீ சில்வா 6வது இடத்திலும் மெண்டிஸ் 8வது இடத்திலும் களமிறங்கி சதமடித்தனர். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் போட்டியில் 5 அல்லது அதற்கு கீழ் வரிசையில் களமிறங்கி 2 இன்னிங்ஸிலும் சதமடித்த முதல் ஜோடி என்ற சாதனையை அவர்கள் படைத்துள்ளனர். அது போக ஒரு போட்டியின் 2 இன்னிங்ஸிலும் சதமடித்த முதல் இலங்கை ஜோடி என்ற சாதனையையும் அவர்கள் படைத்துள்ளனர்.

இதையும் படிங்க: 102, 164 ரன்ஸ்.. மன்கட் செய்யத் தெரியாமல் சொதப்பிய வங்கதேச வீரர்.. சொல்லி அடித்த மெண்டிஸ் புதிய உலக சாதனை

அத்துடன் ஒரு போட்டியின் 2 இன்னிங்ஸிலும் 150க்கும் மேற்பட்ட ரன்கள் (202 மற்றும் 173) பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் இலங்கை ஜோடி என்ற வரலாற்றையும் அவர்கள் படைத்துள்ளனர். அந்த வகையில் 3 நாட்கள் வங்கதேசத்தை அதன் சொந்த மண்ணில் வச்சு செய்த இலங்கை 511 ரன்களை எனக்காக நிர்ணயித்துள்ளது. அதை சேசிங் செய்யும் வங்கதேசம் ஹசன் ஜாய் 0, ஜாகிர் ஹசன் 19, கேப்டன் சாண்டோ 6, சஹாடத் ஹொசைன் 0, லிட்டன் டாஸ் 0 என முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் இழந்து 3வது நாள் முடிவில் 47/5 என்று திணறி வருகிறது. களத்தில் மோனிமுல் ஹைக் 7*, டைஜுல் இஸ்லாம் 6* ரன்களுடன் உள்ளனர்.

Advertisement