- Advertisement -
உலக கிரிக்கெட்

565 ரன்ஸ்.. அல்வா கேட்ச்சை விட்டு சிரித்த பாபர் அசாம்.. பாகிஸ்தானை பொளந்த வங்கதேசம்.. வரலாற்று சாதனை

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 21ஆம் தேதி ராவில்பிண்டி நகரில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 448/6 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் சதமடித்து 171*, சௌட் ஷாக்கீல் 141 ரன்கள் எடுத்தனர். வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக ஹசன் மஹமுட், சோரிபுல் இஸ்லாம் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசத்துக்கு ஜாகிர் ஹசன் 12, கேப்டன் சாண்டோ 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் சத்மன் இஸ்லாம் அரை சதமடித்து 93 ரன்கள் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பொளந்த வங்கதேசம்:

அவருடன் சேர்ந்து மிடில் ஆர்டரில் விளையாடிய மோனிமூல் ஹைக் தம்முடைய பங்கிற்கு அரை சதமடித்து 50 ரன்கள் ஆட்டமிழந்தார். அதற்கடுத்ததாக வந்த ஷாகிப் அல் ஹசன் 15 ரன்னில் அவுட்டானாலும் அனுபவ வீரர் முஸ்ஃபிகர் ரஹீம் நங்கூரமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய லிட்டன் தாஸ் 6வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அதைத் தொடர்ந்து வந்த மெஹதி ஹசன் தம்முடைய பங்கிற்கு நிதானமாக விளையாடி அரை சதமடித்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய ரஹீம் சதமடித்து வங்கதேசத்தை 400 ரன்கள் தாண்ட வைத்தார். நேரம் செல்ல செல்ல நன்கு செட்டிலாகி விளையாடிய அவர் 150 ரன்களில் இருந்த போது கொடுத்த அல்வா கேட்ச்சை லெக் ஸ்லிப்பில் பாபர் அசாம் கோட்டை விட்டார்.

- Advertisement -

அந்த வெறுப்பில் களத்தில் படுத்துக்கொண்டே அவர் சிரித்தது பாகிஸ்தான் ரசிகர்களையும் கேப்டனையும் கடுப்பேற்றியது. மறுபுறம் அதை பயன்படுத்தி அசத்திய ரஹீம் இரட்டை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 22 பவுண்டரி ஒரு சிக்சருடன் 191 (341) வருடங்களில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களில் அவருடன் சேர்ந்து விளையாடிய மெஹதி ஹசன் 77 ரன்கள் குவித்து அவுட்டானார்.

அபார சாதனை:

இறுதியில் வங்கதேசத்தை ஒரு வழியாக 565 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக நாசீம் ஷான் 3, ஷாஹீன் அப்ரிடி 2, குர்ராம் சேஷாத் 2, முகமத் அலி 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய அதிகபட்ச ஸ்கோரை (565) பதிவு செய்த வங்கதேசம் வரலாற்றுச் சாதனை படைத்தது. இதற்கு முன் கடந்த 2015ஆம் ஆண்டு குல்னாவில் பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் 555/6 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: தோனியின் இடத்தை நிரப்பப்போகும் பஞ்சாப் வீரர்.. இவர் வந்தா கரெக்ட்டா இருக்கும் – சி.எஸ்.கே அணி முடிவு எடுக்குமா?

அதனால் பாகிஸ்தான் தைரியமாக முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்த முடிவு சொதப்பியது என்றே சொல்லலாம். அதன் பின் விளையாடும் பாகிஸ்தான் 4வது நாள் முடிவில் 23/1 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது இன்னும் பாகிஸ்தான் 94 ரன்கள் பின்தங்கியுள்ளதால் வெற்றி பெற வாய்ப்பில்லை. மறுபுறம் 5வது நாளில் விரைவாக எஞ்சிய 9 விக்கெட்டுகளை எடுத்தால் வங்கதேசம் வெற்றி பெற வாய்ப்புள்ளது. மற்றப்படி இப்போட்டி டிராவில் முடிவடையவே பிரகாச வாய்ப்புள்ளது.

- Advertisement -