98க்கு ஆல் அவுட்.. மண்ணை கவ்விய நியூசிலாந்து 2 மோசமான சாதனை.. மாபெரும் வரலாறு படைத்த வங்கதேசம்

NZ vs BAN
- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அதில் முதலிரண்டு போட்டிகளில் வென்ற நியூசிலாந்து ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றிய நிலையில் சாம்பிரதாய கடைசி போட்டி டிசம்பர் 22ஆம் தேதி நேப்பியர் நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற வங்கதேச முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு ரச்சின் ரவீந்திரா 8, ஹென்றி நிக்கோலஸ் 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 16/2 என்ற சுமாரான துவக்கத்தைப் பெற்ற நியூசிலாந்தை காப்பாற்ற முயற்சித்த மற்றொரு துவக்க வீரர் வில் எங்கை 24 ரன்களிலும் கேப்டன் டாம் லாதமை 21 ரன்களிலும் சோரிபுல் இஸ்லாம் அவுட்டாக்கி பெரிய அழுத்தத்தை உண்டாக்கினார்.

- Advertisement -

சாதனை வெற்றி:
அந்த சூழ்நிலையில் நங்கூரமாக விளையாட முயற்சித்த டாம் பிளண்டல் 4, மால் சேப்மென் 2, ஜோஷ் கிளார்க்சன் 16 என அடுத்து வந்த வீரர்களும் வங்கதேசத்தின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இறுதியில் 31.4 ஓவரிலேயே 98 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக முதல் முறையாக 100 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகி குறைந்தபட்ச பதிவு செய்து 2 மோசமான சாதனை படைத்தது.

அந்தளவுக்கு பந்து வீச்சில் அட்டகாசம் செய்த நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோரிபுல் இஸ்லாம் 3, டன்சிம் ஹசன் 3, சௌம்மியா சர்கார் 3 விக்கெட்களை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 99 என்ற சுலபமான இலக்கை துரத்திய வங்கதேசத்திற்கு அனாமல் ஹைக் 37 (33) கேப்டன் நஜ்முல் சாண்டோ 51* (42) ரன்கள் எடுத்து 15.1 ஓவரிலேயே 9 விக்கெட் வித்தியாசத்தில் மிகவும் எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு போட்டியில் வென்று வங்கதேசம் புதிய வரலாறு படைத்தது. குறிப்பாக 2007 முதல் நியூசிலாந்து மண்ணில் அவ்வப்போது விளையாடி வந்த வங்கதேசம் இதற்கு முன் விளையாடிய 18 போட்டிகளிலும் தோல்விகளை சந்தித்தது. ஆனால் தற்போது அந்த மோசமான வரலாற்றை மாற்றியுள்ள வங்கதேசம் நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக வென்று சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: சஞ்சு சாம்சனை விட அவர் ஃபார்முக்கு வந்தது தான் இந்திய அணிக்கு பலம்.. சஞ்சய் மஞ்ரேக்கர் பேட்டி

மறுபுறம் சொந்த மண்ணில் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்து மோசமாக விளையாடிய நியூசிலாந்து முதல் முறையாக மண்ணைக் கவ்வி தோல்வியை சந்தித்தது. இருப்பினும் முதல் 2 போட்டிகளில் வென்றதால் தப்பிய அந்த அணி 2 – 1 (3) என்ற கணக்கில் கேன் வில்லியம்சன் போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமலேயே கோப்பையை வென்றது.

Advertisement