சஞ்சு சாம்சனை விட அவர் ஃபார்முக்கு வந்தது தான் இந்திய அணிக்கு பலம்.. சஞ்சய் மஞ்ரேக்கர் பேட்டி

Sanjay Manjrekar 5
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முடிந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்தியா 2023 உலகக்கோப்பை தோல்வியிலிருந்து மீண்டெழுந்து தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்தது. அதிலும் ரோகித் சர்மா போன்ற மூத்த வீரர்கள் இல்லாமல் கே.எல் ராகுல் தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா 2018க்குப்பின் தென்னாபிரிக்க மண்ணில் 2வது முறையாக ஒருநாள் தொடரை வென்று சாதனையும் படைத்தது.

குறிப்பாக வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடைபெற்ற 3வது போட்டியில் சஞ்சு சாம்சன் தம்முடைய கேரியரில் முதல் முறையாக சதமடித்து 108 ரன்கள் விளாசி வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார். கடந்த 2015இல் அறிமுகமாகி நிலையற்ற வாய்ப்புகளைப் பெற்று தடுமாறி வந்த அவர் தற்போது சதமடித்துள்ளதால் இனிமேலாவது நிலையான இடத்தை பெற்று அசத்துவார் என்ற நம்பிக்கை ரசிகர்களுடன் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்திய அணிக்கு முக்கியம்:
அவரை விட 3 போட்டிகளில் 10 விக்கெட்களை எடுத்த அர்ஷிதீப் சிங் தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற ஒரு ஒருநாள் தொடரில் அதிக விக்கெட்களை எடுத்த இந்திய வேகப்பந்து வீச்சாளராக சாதனை படைத்து வெற்றியில் முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருதை வென்றார். உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் அசத்தியதால் கடந்த வருடம் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் உம்ரான் மாலிக் போல் அல்லாமல் நல்ல லைன், லென்த் ஆகியவற்றை பின்பற்றி அசத்தலாகவே செயல்பட்டார்.

ஆனால் நாளடைவில் டி20 கிரிக்கெட்டில் நோபால்களை போட்டு தள்ளி மோசமான உலக சாதனை படைத்து ரன்களை வாரி வழங்கிய அவர் ஒரு வழியாக இத்தொடரில் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் சஞ்சு சாம்சனை விட இத்தொடரில் அர்ஷ்தீப் ஃபார்முக்கு திரும்பியது இந்திய அணிக்கு பெரிய பலம் என்று சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“சஞ்சு சாம்சனின் பேட்டிங்கை விட இது மிகப்பெரிய சாதகமான அம்சமாகும். ஏற்கனவே இத்தொடரில் 5 விக்கெட்டுகளை எடுத்த அவர் 3வது போட்டியில் நன்கு செட்டிலாகி இருந்த பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கினார். எடுத்துக்காட்டாக 81 ரன்கள் அடித்த டோனி டீ ஜோர்சியை அவர் ஸ்விங் செய்து நல்ல பந்தில் அவுட் செய்தார்”

இதையும் படிங்க: அடுத்த வருஷம் அந்த சீரிஸ்ல.. என்னை ஃபைட்டராக பாப்பீங்க.. உலக அணிகளை எச்சரித்த ரசல்

“குறிப்பாக அவுட்டாகாமல் தற்காத்துக் கொண்டிருந்த ஒரு பேட்ஸ்மேனை அடிக்க முடியாத பந்தை வீசி அவர் அவுட்டாக்கினார். அந்த வகையில் இந்தியா அடித்த ரன்களுக்கு எதிராக அர்ஷிதீப் விக்கெட்டுகளை எடுத்தார். எனவே நம்முடைய முதன்மை வீரர்களைக் கொண்ட வலுவான அணி திரும்பும் போது அர்ஷ்தீப் கண்டிப்பாக அதில் இருப்பார்” என்று கூறினார்.

Advertisement