இலங்கை வீரர்கள் ஓய்வறை கண்ணாடி கதவை உடைத்தது வங்கதேச வீரர்களா ?

- Advertisement -

இலங்கை – வங்கதேச அணிகளிடையேயான கடைசி லீக் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் உள்ள பிரேமதாஸா மைதானத்தில் நடைபெற்றது.இதில் 2விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்று வங்கதேச அணி நிடாஸ்கோப்பையின் இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.

bangal

- Advertisement -

இலங்கை மண்ணில் நடைபெற்றுவரும் ஒருபோட்டியில் வங்கதேச அணி இலங்கையை இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாத இலங்கை வீரர்கள் வங்கதேச அணி வெற்றிபெற்ற பின் அவர்களுடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.இலங்கை வீரர்கள் மைதானத்தில் வைத்தே வங்கதேச வீரர்களை அடிக்க பாய்ந்தனர்.

ஒருகட்டத்தில் இந்த வாக்குவாதம் கைகலப்பாக உருவெடுக்க வங்கதேச வீரர்கள் உடனடியாக சுதாரித்துக்கொண்டு மைதானத்தில் நடக்கவிருந்த பெரும் அசம்பாவிதத்தினை தவிர்த்து உடைமாற்றிடும் அறைக்கு திரும்பினர்.

srilanka1

உடைமாற்றிடும் அறையில் இலங்கை அணிவீரர்கள் மீது கோபத்திலிருந்த வங்கதேச வீரர்கள் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.இது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Advertisement