இந்தியா ரொம்ப பயமுறுத்துறாங்க.. ஜெயிக்கிறத விட அதை செஞ்சாலே போதும்.. வங்கதேச கோச் கவலை

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 19ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் மதியம் 2 மணிக்கு நடைபெறும் 17வது லீக் போட்டியில் வலுவான இந்தியாவை கத்துக்குட்டியாக கருதப்படும் வங்கதேசம் எதிர்கொள்கிறது. ஏனெனில் இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளை மிகச் சிறப்பாக எதிர்கொண்ட இந்தியா ஹாட்ரிக் வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

அத்துடன் ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல், பும்ரா, குல்தீப் என முக்கியமான வீரர்கள் அனைவருமே அற்புதமான ஃபார்மில் இருந்து வருகிறார்கள். அதனால் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருவதால் இந்த போட்டியிலும் வங்கதேசத்தை அடித்து நொறுக்கி 4வது வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்தியா பயமுறுத்துறாங்க:
இந்நிலையில் வலுவான இந்தியா சொந்த மண்ணில் பயமுறுத்துவது போல் செயல்பட்டு வருவதால் இப்போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் கடினம் என்று தெரிவிக்கும் வங்கதேசம் அணியின் பயிற்சியாளர் ஹத்தூர்சிங்கா தங்களுடைய அணி முழுமையாக 50 ஓவர்கள் விளையாடுவதே பெரிய விஷயமாக இருக்கும் என்று கூறியுள்ளார். குறிப்பாக ரோகித் சர்மா அடங்கிய டாப் ஆர்டர் நெருப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டும் அவர் இது பற்றி போட்டிக்கு முன் பேசியது பின்வருமாறு.

“சமீப காலங்களில் நாங்கள் இந்தியாவுக்கு எதிராக சில வெற்றிகளை கண்டுள்ளோம். ஆனால் உலகக் கோப்பை என்பது வித்தியாசமான போட்டி என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே நல்ல ஃபார்மில் இருக்கும் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் முழுமையாக விளையாடுவோம் என்று நம்புகிறேன். ஏனெனில் இந்திய அணி அனைத்து துறைகளையும் பூர்த்தி செய்துள்ளது என்று நினைக்கிறேன். அவர்களிடம் விக்கெட்டுகளை எடுக்கும் பவுலர்கள் முன்னணியில் இருக்கிறார்கள்”

- Advertisement -

“குறிப்பாக கடந்த காலங்களை போலவே பும்ரா தற்போது தம்முடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். அதே போல மிடில் ஓவர்களில் அசத்தும் அளவுக்கு அவர்களிடம் அனுபவமிக்க ஸ்பின்னர்கள் இருக்கின்றனர். அதை விட அவர்களுடைய பேட்டிங் குறிப்பாக டாப் ஆர்டர் நெருப்பாகவும் பயமின்றி எதிரணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது”

இதையும் படிங்க:

“சொல்லப்போனால் அவர்கள் இந்த உலகக் கோப்பையை தங்களுடைய சொந்த மண்ணில் மகிழ்ச்சியுடன் விளையாடுவது போல தெரிகிறது. அவர்களுக்கு சொந்த மண்ணில் ஏராளமான ஆதரவும் கிடைக்கிறது. மொத்தத்தில் அவர்கள் நல்ல அணியாக இருக்கிறார்கள்” என்று கூறினார். இருப்பினும் கடந்து சில நாட்களில் நெதர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற அணிகள் வலுவான அணிகளை தோற்கடித்ததால் 2007 போன்ற சம்பவத்தை நிகழ்த்த விடாமல் இப்போட்டியில் வங்கதேசத்தை கவனத்துடன் இந்தியா எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement