தென்ஆப்பிரிக்க மண்ணில் வரலாற்று சரித்திர சாதனை – பரிசுத்தொகை அறிவித்த வாரியம் (எவ்வளவு தெரியுமா?)

Bangladesh
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் கடந்த மார்ச் 18-ஆம் தேதியன்று துவங்கியது. செஞ்சூரியனில் நடந்த அந்த போட்டியில் வங்கதேச நட்சத்திர ஆல்ரவுண்டர் சாகிப் அல் ஹசன் அதிரடியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற வங்கதேசம் 1 – 0 என முன்னிலை பெற்றது. அதைத் தொடர்ந்து நடந்த 2வது போட்டியில் மீண்டெழுந்த தென்னாப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தக்க பதிலடி கொடுத்தது.

Ban-2

- Advertisement -

அசத்திய தஸ்கின் அஹமத்:
அதனால் 1 – 1 என சமநிலை பெற்ற இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று செஞ்சூரியன் நகரில் நடைபெற்றது. இந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியை வங்கதேச இளம் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அஹமட் தனது அதிரடியான வேகப்பந்து வீச்சால் மிரட்டினார் என்றே கூறலாம்.

ஏனெனில் அந்த அணிக்கு நல்ல தொடக்கம் கொடுக்க முயன்ற தொடக்க வீரர் யானெமான் மாலன் 39, வீரரெய்ன் 12, டேவிட் மில்லர் 16 ஆகிய 3 முக்கியமான வீரர்களை சீரான இடைவெளிகளில் அவுட் செய்த அவர் தென்னாபிரிக்காவிற்கு கடும் சவாலை அளித்தார். கடைசி வரை அவரின் பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாத தென்ஆப்பிரிக்க வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி வந்தனர்.

கூடவே நட்சத்திர ஆல்ரவுண்டர் சாகிப் அல் ஹசனும் தனது சுழல்பந்து வீச்சில் 2 விக்கெட்டுகளை எடுத்ததால் வெறும் 37 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்கா வெறும் 154 ரன்களுக்கு சுருண்டது. இது ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பதிவு செய்த மிகக் குறைந்த ஸ்கோராகும். வங்கதேச சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய தஸ்கின் அஹமத் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

வங்கதேசம் சரித்திர வெற்றி:
அதை தொடர்ந்து 155 என்ற மிகவும் சுலபமான இலக்கை துரத்திய வங்கதேச அணிக்கு தொடக்க வீரர்கள் கேப்டன் தமீம் இக்பால் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 127 ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தனர். இந்த முக்கியமான போட்டியில் இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ககிசோ ரபாடா உட்பட தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் அனைவரும் விழிபிதுங்கி நின்றனர். இதில் 8 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்திருந்தபோது லிட்டன் தாஸ் அவுட் ஆனாலும் மறுபுறம் அதிரடியாக விளையாடிய கேப்டன் தமிம் இக்பால் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 82 பந்துகளில் 14 பவுண்டரிகள் உட்பட 87* ரன்கள் எடுத்தார். அவருடன் சாகிப் அல் ஹசன் 18* ரன்கள் எடுக்க 26.3 ஓவர்களில் 156/1 ரன்களை எடுத்த வங்கதேசம் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Taskin Ahmed Bangladesh

இதன் வாயிலாக 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றிய வங்கதேசம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் மண்ணை கவ்வ செய்து ஒரு ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்தது. கடந்த 2002 முதல் அவ்வப்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வந்த வங்கதேசம் தொடர்ந்து தோல்வி அடைந்த நிலையில் 20 வருடங்கள் கழித்து முதல் முறையாக இப்போது தான் தென்னாப்பிரிக்க மண்ணில் ஒருநாள் தொடரை வென்று புதிய சரித்திர சாதனை படைத்துள்ளது. இது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக ஒரு கிரிக்கெட் தொடரை வென்ற வங்கதேசம் புதிய சரித்திரம் படைத்துள்ளது.

- Advertisement -

மாற்றம் முன்னேற்றம் வங்கப்புலிகள்:
இந்த சரித்திர வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் எடுத்து வித்திட்ட தஸ்கின் அகமது ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்று அசத்தினார். இப்படி ஒரு பிரம்மாண்ட வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ள வங்கதேசத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஏனெனில் வங்கதேசம் போன்ற ஒரு கத்துக்குட்டி அணி தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல.

Bangladesh

இருப்பினும் சமீப காலங்களாக தஸ்கின் அகமது போன்ற நிறைய இளம் வீரர்கள் வங்கதேச அணியில் காலடி எடுத்து வைத்துள்ளதால் அந்த அணி சரித்திர வெற்றிகளை பெற துவங்கியுள்ளது. குறிப்பாக கடந்த மாதம் நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் இதேபோல வங்கதேசம் வெற்றி பெற்றிருந்தது.

- Advertisement -

அதன் காரணமாக நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்த வங்கதேசம் புதிய சாதனை படைத்தது. இப்படி இளம் வீரர்களால் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் அடைந்துள்ள வங்கதேசம் வெளிநாடுகளில் வெற்றி பெறத் துவங்கியுள்ளது அந்நாட்டு ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

இதையும் படிங்க : முடிந்தது தல தோனியின் சகாப்தம் : வரலாறு கண்ட மகத்தான கேப்டன், 2008 – 2021 வரையிலான சாதனை பயணம் இதோ

இந்த சரித்திர வெற்றியால் வரும் 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஐசிசி உலக கோப்பையில் பங்கேற்க வங்கதேச அணி ஏறக்குறைய தகுதி பெற்றுள்ளது. இப்படி ஒரு பிரம்மாண்ட சரித்திர வெற்றியை பதிவு செய்த தங்கள் அணியை பாராட்டும் வகையில் $350,000 டாலர்களை வங்கதேச கிரிக்கெட் வாரியம் பரிசாக அறிவித்து ஊக்குவித்துள்ளது

Advertisement