ஒரே வருடத்தில் 2 முறை ! டக் அவுட்டாவதில் வங்கதேசம் படு மோசமான உலகசாதனை – கலாய்க்கும் ரசிகர்கள்

WI vs Ban Kemor Roach
- Advertisement -

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அங்கு அந்த அணிக்கு எதிராக 2 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதலாவதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 16இல் துவங்கியது. ஆன்ட்டிகுவாவில் உள்ள சார் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசத்துக்கு அதன் தொடக்க வீரர் ஜாய் போட்டியின் 2-வது பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

3-வது ஓவரில் அடுத்து வந்த சாந்தோவும் 5 பந்துகள் சந்தித்து டக் அவுட்டாகி ஏமாற்ற அடுத்ததாக வந்த மோனி மூல் ஹைக் 5-வது ஓவரில் 6 பந்துகள் சந்தித்து டக் அவுட்டாகி மேலும் அதிர்ச்சி கொடுத்தார். அந்த அளவுக்கு அற்புதமாக பந்து வீசிய வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தாக்குப்பிடிக்க முடியாத வங்கதேசம் 16/3 என படு மோசமான தொடக்கத்தை பெற்றது. அந்த சரிவை சரிசெய்வதற்கு போராடிய மற்றொரு நட்சத்திர தொடக்க வீரர் தமிம் இக்பால் 29 (43) ரன்களில் அவுட்டாக அடுத்த சில ஓவர்களிலேயே மற்றொரு நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் 12 (33) ரன்களில் அவுட்டாகி மேலும் பின்னடவை கொடுத்தார்.

- Advertisement -

6 டக் அவுட்:
அந்த நிலைமையில் வந்த விக்கெட் கீப்பர் நுருள் ஹசணும் சந்தித்த 2-வது பந்திலேயே டக் அவுட்டாகி வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்ப அவருக்குப் பின் வந்த மெஹதி ஹசன் தனது பங்கிற்கு 2 (22) ரன்கள் மட்டுமே எடுத்து சீக்கிரமாகவே வெளியே சென்றார். அந்த சமயத்தில் களமிறங்கிய முஸ்தபிசுர் ரஹ்மான் நானும் பின்னாடியே வருகிறேன் என்று சந்தித்த 2-வது பந்தில் டக் அவுட்டானதால் வங்கதேசம் 100 ரன்களை தொடுமா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் நடுவரிசையில் முடிந்தளவு நங்கூரத்தை போட முயன்ற வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 6 பவுண்டரி 1 சிக்சருடன் அரைசதம் கடந்து 51 (67) ரன்கள் எடுத்ததால் 100 ரன்களை கடந்தது.

ஆனால் அவர் அவுட்டானதும் கடைசி விக்கெட்டாக கலீட் அஹமத் சந்தித்த 3-வது பந்தில் டக் அவுட்டாகி வங்கதேசத்தின் கதையை முடித்து வைத்தார். அதனால் வெறும் 103 ரன்களுக்கு சுருட்டிய வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பந்துவீச்சில் அல்சாரி ஜோசப், ஜெயதேவ் சீல்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் கெமர் ரோச், கெயில் மேயர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் முதல் நாள் முடிவில் 95/2 என்ற நல்ல நிலையில் உள்ளது.

- Advertisement -

மோசமான உலகசாதனை:
1. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசத்துக்கு அந்த அணியின் 6 பேட்ஸ்மேன்கள் டக் அவுட்டானார்கள். அதில் ஆச்சர்ய்மாக அந்த 6 பேரும் 1, 2, 3, 4, 5 , 6 என எண்வரிசைப்படி பந்துகளை சந்தித்து டக் அவுட்டாகியுள்ளார்கள்.

2. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் இதுபோல ஒரு அணியின் 6 பேட்ஸ்மேன்கள் டக் அவுட்டாவது இப்போட்டியுடன் சேர்த்து 7 முறையாக நிகழ்ந்துள்ளது.

- Advertisement -

3. அதில் அதிகபட்சமாக வங்கதேசம் தான் 3 முறை ஒரு இன்னிங்சில் 6 டக் அவுட்களை பதிவு செய்துள்ளது. ஆனால் உலகின் வேறு எந்த அணியும் ஒரு முறைக்கு மேல் 6 டக் அவுட்களை பதிவு செய்ததே கிடையாது. அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை ஒரு இன்னிங்சில் 6 டக் அவுட்களை பதிவு செய்த அணி என்ற படு மோசமான சாதனையை வங்கதேசம் படைத்துள்ளது.

4. ஆனால் அதைவிட கேவலம் என்னவெனில் கடைசியாக வங்கதேசம் கடந்த மே மாதம் சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அதில் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில் பொறுப்புடன் விளையாட வேண்டிய 2-வது போட்டியின் 2-வது இன்னிங்ஸ்சில் இதேபோல் 6 டக் அவுட்களை பதிவு செய்த வங்கதேசம் வெறும் 169 ரன்களுக்கு சுருண்டு 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று சொந்த மண்ணில் 1 – 0 என்ற கணக்கில் இலங்கையிடம் கோப்பையைத் தாரை வார்த்தது.

இதையும் படிங்க : சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை பறக்கவிட்ட டாப் 5 பேட்ஸ்மேன்களின் – பட்டியல் இதோ

4. அந்த போட்டிக்குப் பின் அந்த இன்னிங்ஸ்க்கு பின் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்த போட்டியில் கொஞ்சம் கூட மாறாமல் மீண்டும் 6 டக் அவுட்களை பதிவு செய்துள்ள அந்த அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அடுத்தடுத்த போட்டிகளில் அடுத்தடுத்த இன்னிங்சில் 6 டக் அவுட்களை பதிவு செய்த முதல் அணி என்ற அரிதான படுமோசமான உலக சாதனையை படைத்துள்ளது. இதனால் சாதாரணமாகவே அந்த அணியை கிண்டலடிக்கும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தற்போது வெறித்தனமாக கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement