சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை பறக்கவிட்ட டாப் 5 பேட்ஸ்மேன்களின் – பட்டியல் இதோ

rohith 1
- Advertisement -

நூற்றாண்டுக்கு முன்பு துவங்கப்பட்ட டெஸ்ட் போட்டிகள் 5 நாட்களாகியும் முடிவை கொடுக்காமல் டிராவில் முடிந்ததால் 60 ஓவர்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் துவங்கப்பட்டு அதுவும் 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதில் நிறைய எதிர்பாராத தருணங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்ததால் 90களில் ஒருநாள் கிரிக்கெட் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் போட்டிகளாக மாறியது. அந்த காலங்களில் ஒரு போட்டியில் 2 அணி வீரர்களும் சேர்ந்து 10 சிக்ஸர்கள் கூட அடிப்பதெல்லாம் ரசிகர்கள் காண முடியாத ஒன்றாகவே இருந்தது. அதன்பின் ஒருநாள் அமர்ந்து பார்க்க முடியாமல் 3 – 4 மணி நேரத்தில் முடிவைக் கொடுக்கும் டி20 போட்டிகள் கடந்த 2005இல் அறிமுகமாகின.

Dhoni

- Advertisement -

வரலாற்றில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை விட ஓவருக்கு ஓவர் நிமிடத்திற்கு நிமிடம் எதிர்பாராத திருப்பங்களை கொடுத்த டி20 போட்டிகள் வெறும் 3 மணி நேரத்தில் முடிவை கொடுத்ததால் அப்போது முதல் இன்று வரை அதுதான் பெரும்பாலான ரசிகர்களின் விருப்பமான தொடராக உருவெடுத்துள்ளது. அதற்கு காரணம் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 10 சிக்ஸர்களை பார்ப்பதே கடினம் என்ற நிலையில் டி20 கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் 20 – 30 என ஏராளமான சிக்ஸர்களை பேட்ஸ்மேன்கள் மழையாக பொழிகிறார்கள்.

நாட்டுக்காக சிக்ஸர் மழை:
அதை பார்த்து இன்று ஐபிஎல், பிக் பேஷ் என ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு டி20 தொடர்கள் நடைபெறுவதால் அதில் உலகின் டாப் நட்சத்திர பேட்ஸ்மென்கள் தங்களது திறமையால் ஒவ்வொரு வருடமும் ரன் மழையும் சிக்ஸர் மழையும் பொழிந்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளனர். என்னதான் ஒரு நட்சத்திர வீரர் பணத்திற்காக முழு மூச்சுடன் அதிரடியாக பேட்டிங் செய்தாலும் தனது தாய் நாட்டிற்காக அடிக்கும் ஒவ்வொரு ரன்களையும் சிக்சர்களையும் ஆத்மார்த்தமாக அடிப்பார். அப்படி தாய்நாட்டுக்காக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரசிகர்களை பறக்கவிட்ட டாப் 5 பேட்ஸ்மேன்களை பற்றி பார்ப்போம்.

Finch

5. ஆரோன் பின்ச் 117: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நட்சத்திர தொடக்க வீரர் ஆரோன் பின்ச் அந்த அணியால் தொடமுடியாத ஒரே இலக்காக இருந்த டி20 உலகக் கோப்பையை கடந்த 2021இல் கேப்டனாக வழிநடத்தி வாங்கிக் கொடுத்த பெருமைக்குரியவர். ஐபிஎல் தொடரில் இதுவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு செயல்படாத இவர் ஆஸ்திரேலியா என்று வந்தால் பெரும்பாலான போட்டிகளில் அதிரடியாக ரன்களை குவிக்க தவறியதில்லை.

- Advertisement -

அந்த வகையில் அறிமுகமான 2011 முதல் பங்கேற்ற 92 போட்டிகளில் 2885 ரன்களை 145.29 சூப்பரான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ள அவர் 117 சிக்சர்களையும் பறக்கவிட்டு சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனாகவும் இந்தப் பட்டியலில் 5-வது இடமும் பிடிக்கிறார்.

morgan

4. இயன் மோர்கன் 120: அயர்லாந்தில் பிறந்து வளர்ந்து விளையாடி நாளடைவில் இங்கிலாந்துக்கு விடிவெள்ளியாக உருவெடுத்து தொட முடியாமல் தவித்து வந்த உலக கோப்பையை கடந்த 2019இல் கேப்டனாக வாங்கிக் கொடுத்த இவரும் இதுவரை ஐபிஎல் தொடரில் சுமாராகவே செயல்பட்டுள்ளார்.

- Advertisement -

ஆனால் இங்கிலாந்துக்காக வரும்போது எதிரணிகளை பந்தாடும் இவர் 115 போட்டிகளில் களமிறங்கிய 107 இன்னிங்சில் 2458 ரன்களை 136.17 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்துள்ளார். அத்துடன் 120 சிக்சர்களையும் பறக்கவிட்டுள்ள இவர் சர்வதேச போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த இங்கிலாந்து பேட்ஸ்மேனாகவும் இந்த பட்டியலில் 4-வது இடமும் பிடிக்கிறார்.

gayle 1

3. கிறிஸ் கெயில் 124: டி20 கிரிக்கெட் இன்று உலகம் முழுவதும் பிரபலமடைந்து காணப்படுவதற்கு வெஸ்ட் இண்டீசை சேர்ந்த இந்த சூறாவளி புயல் கடந்த பல வருடங்களாக உலகின் அனைத்து இடங்களிலும் எதிரணி பவுலர்களை சுழன்றடித்ததே முக்கிய காரணமாகும். ஐபிஎல் தொடரிலும் சரி சர்வதேச அளவிலும் சரி பிக் பேஷ், பிஎஸ்எல் என எங்கு விளையாடினாலும் ஒரே வழி தனி வழியாக பவுலர்களை பிரித்து மேய்ந்த இவர் வரலாற்றில் பல மறக்கமுடியாத டி20 இன்னிங்ஸ்களை விளையாடியுள்ளார்.

- Advertisement -

ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் 10000 ரன்கள் 1000 சிக்ஸர்கள் அடித்து முடிசூடா மன்னனாக இருக்கும் இவர் தனது வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக வெறும் 75 இன்னிங்ஸ்சிலேயே 1899 ரன்களை 137.50 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் விளாசியுள்ளார். அதேபோல் 124 சிக்ஸர்களை அடித்து ரசிகர்களை மகிழ்விக்க தவறாத இவர் டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளார்.

Rohith

2. ரோஹித் சர்மா 155: கடந்த 2007 டி20 உலக கோப்பையில் அறிமுகமாகி இன்று இந்தியாவை கேப்டனாக வழி நடத்தும் அளவுக்கு மெகா வளர்ச்சி கண்டுள்ள இவர் ஐபிஎல் தொடரிலும் சரி இந்தியாவுக்காகவும் சரி அட்டகாசமாக பேட்டிங் செய்வதால் ரசிகர்களால் ஹிட்மேன் என்று கொண்டாடப்படுகிறார். அதிலும் உலகின் எப்பேர்ப்பட்ட தரமான பவுலர் எவ்வளவு துல்லியமாக ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசினாலும் அதை அடிப்பதற்காக பிறந்தது போல் அசால்டாக புல் ஷாட் அடிப்பதில் உலகில் இவருக்கு நிகர் யாருமில்லை.

அந்த வகையில் இந்தியாவுக்காக இதுவரை 117 இன்னிங்சில் 3313 ரன்களை 139.55 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் அடித்துள்ள இவர் 155 சிக்ஸர்களையும் பறக்க விட்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த இந்திய பேட்ஸ்மேனாகவும் இந்த பட்டியலில் 2-வது இடமும் பிடிக்கிறார்.

guptill

1. மார்ட்டின் கப்டில்: கடந்த 2009இல் அறிமுகமாகி நியூசிலாந்தின் நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரராக கடந்த பல வருடங்களாக நிறைய வெற்றிகளை பெற்று கொடுத்துள்ள இவர் ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்டாலும் தாய்நாட்டுக்காக 108 இன்னிங்சில் 3299 ரன்களை 136.71 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்.

மேலும் இப்பட்டியலில் உள்ள இதர நட்சத்திரங்களை காட்டிலும் 165 சிக்ஸர்களை பறக்க விட்டுள்ள இவர் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்சர்களை அடித்த பேட்ஸ்மேனாக உலக சாதனை படைத்துள்ளார்.

Advertisement