இலங்கை படுதோல்வி, வங்கதேசம் அசத்தல் வெற்றி…இறுதிப்போட்டியில் இந்திய அணியுடன் பலபரிச்சை .

bangladesh
- Advertisement -

இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான நிடாஸ் டி20 கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது.இலங்கை – வங்கதேச அணிகளிடையேயான கடைசி லீக் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் உள்ள பிரேமதாஸா மைதானத்தில் நடைபெற்றது.

rahim

- Advertisement -

இதில் 2விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்று வங்கதேச அணி நிடாஸ்கோப்பையின் இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.டாஸ்வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்து இலங்கையை பேட்டிங் செய்ய பணித்தது.
இதில் முதலில் விளையாடிய இலங்கை அணி 20ஓவர்களின் முடிவில் 7விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குணத்திலகா மற்றும் மென்டீஸ் களமிறங்கினர். குணத்திலகா 4ரன்களில் ஷாகிப் அல் அஸேனிடம் விக்கெட்டை பறிகொடுக்க மெண்டீஸ் 11 ரன்களில் முஷ்பிகூர் ரஹ்மானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பெரேரா மட்டும் ஒருபுறம் நின்று நிதானமாக ஆட, பின்னர் வந்த உபுல் தரங்கா 5ரன்கள் எடுத்திருந்த நிலையில் மெஹிடி ஹாசனிடம் ரன் அவுட் ஆனார்.

srilanka

அடுத்து இறங்கிய ஷனாகா தான் எதிர்கொண்ட முஷ்பிகூர் ரஹ்மான் வீசிய முதல் பந்திலேயே முஷ்பிகூர் ரஹீமிடம் கேட்ச் தந்து விக்கெட்டை பறிகொடுக்க ஒருகட்டத்தில் இலங்கை அணி 5.4 ஓவர்களில் 5விக்கெட்டுகளை இழந்து 41 ரன்களுடன் தடுமாறியது.

- Advertisement -

பின்னர் குசல் பெரேராவுடன் ஜோடி சேர்ந்த திஷாரா பெரேரா அணியை சரிவிலிருந்து மீட்க போராடி அணி கௌரவமான ஸ்கோரை எட்ட உதவினர். குசல் பெரேரா 61 ரன்களை எடுக்க திஷாரா பெரேரா 58 ரன்களை எடுக்க இலங்கை அணி இறுதியில் 20ஓவர்களில் 7விக்கெட் இழப்பிற்கு 159ரன்களை எடுத்தது.

வங்கதேச அணியின் தரப்பில் முஷ்பிகூர் ரஹ்மான் அதிகபட்சமாக 2விக்கெட்டுகளை வீழ்த்தினார்.160 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி ஒரு பந்து மீதமிருக்கையில் 160 ரன்களை எடுத்து 2விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை த்ரில்லாக வென்றது.

bangladeshs

வங்கதேச அணியில் தொடக்க ஆட்டக்காரரனா தமிம் இக்பால் சிறப்பாக ஆடி அரைசதம் அடிக்க மொமதுல்லா 43ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் த்ரில் வெற்றிக்கு உதவினார்.இந்த வெற்றியின் மூலம் நிடாஸ்கோப்பையின் இறுதிப்போட்டியில் வங்கதேச அணி இந்திய அணியுடன் வரும் 18ம் தேதி பிரேமதாஸா மைதானத்தில் பலப்பரிட்சை நடத்தவுள்ளது.

Advertisement