மைதானத்தில் தெரு சண்டை… கும்பலாக பாம்பு டான்ஸ், ஆடி வெறுப்பேற்றிய வங்கதேச அணி.

dance
- Advertisement -

இலங்கை – வங்கதேச அணிகளிடையேயான கடைசி லீக் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் உள்ள பிரேமதாஸா மைதானத்தில் நடைபெற்றது.இதில் ஒரு பந்து மீதமிருக்கையில் 19.5 ஓவர்களில் வெற்றி இலக்கான 160 ரன்களை எடுத்து 2விக்கெட் வித்தியாசத்தில் த்ரில்லாக இலங்கையை வென்று வங்கதேச அணி நிடாஸ்கோப்பையின் இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.

bangladesh

- Advertisement -

நேற்றைய இந்த போட்டியின் போது மோதலுக்கும்,கிண்டலுக்கும்,டான்ஸ்க்கும் பஞ்சமே இல்லை எனலாம். நேற்றைய போட்டி இறுதிகட்டத்தின் போது தெருச்சண்டையை போலவே மாறிவிட்டது.19வது ஓவரை உதனா வீச முதல் இரண்டு பந்துகளும் தலைக்கு மேலே எழும்ப நோ பால் தரமறுத்துவிட்டார் நடுவர்.

வங்கதேச வீரர் நோபால் தரவேண்டுமென்று நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட அப்போது குளிர்பானம் கொண்டுவந்த வங்கதேச வீரருக்கும் இலங்கை வீரருக்கும் வாக்குவாதம் ஏற்பட மைதானமே ரணகளமானது ஒருகட்டத்தில். ஒருவழியாக சமாதானப்படுத்தி ஆட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கையில் 19.5 வது பந்தை சிக்ஸருக்கு தூக்கி மொமதுல்லா வங்கதேச அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

bangladesh1

வெற்றி உறுதியானதும் வங்கதேச வீரர்கள் அனைவருமாக சேர்ந்து மைதானத்தில் பாம்பு டான்ஸ் ஆடி இலங்கை வீரர்களை வெறுப்பேற்ற மீண்டும் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு வரை சென்றுவிட்டது.

ஒட்டுமொத்தத்தில் மிகமுக்கியமான நேற்றைய போட்டி பரபரப்பிற்கும், ஆவேசத்திற்கும் பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக நடந்தது ரசிகர்களில் ஒருசாராருக்கு மகிழ்ச்சியையும், மற்றொரு சாராருக்கு முகசுளிப்பையும் ஏற்படுத்தியது.நேற்றைய போட்டியில் வென்ற வங்கதேச அணி இந்திய அணியை வரும் 18ம் தேதி கொழும்பிலுள்ள பிரேமதாஸா மைதானத்தில் இறுதிப்போட்டியில் எதிர்கொள்கின்றது.

Advertisement