மீண்டும் பூதகரமா வெடித்துள்ள பால் டேம்பரிங் பிரச்சனை. தடை செய்யப்படவுள்ள 5 வீரர்கள் – விவரம் இதோ

ball

கடந்த 2018ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது, பந்தை சாண்ட் பேப்பர் (மணல் துகள்கள் கொண்ட காகிதம்) கொண்டு சேதப்படுத்திய குற்றத்திற்காக, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஒரு ஆண்டு மற்றும் இவர்களின் பேச்சைக் கேட்டு அந்த செயலைச் செய்த மற்றொரு வீரரான பேன்கிராஃப்டுக்கு 9 மாதங்களும், சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட தடை விதித்தது ஆஸ்திரேலியா கிரக்கெட் நிர்வாகம். அத்தடைக்காலம் முடிந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் சர்வதேச போட்டிகளிலும், பேன்கிரஃப்ட் உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி வருகின்றனர். தற்போது பேன்கிராஃப்ட் கொடுத்த ஒரு பேட்டியினால் முடிந்துபோன அந்த பிரச்சனை பூதாகராமாக வெடித்துள்ளது.

warnersmith

தற்போது இங்கிலாந்தில் கவுண்ட்டி அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகின்றன. இத்தொடரில் பேன்கிராஃப்ட், டுர்ஹாம் அணிக்காக விளையாடி வருகிறார். அவரைப் பேட்டியெடுத்த பத்திரிக்கையாளர்கள், பந்தை சேதப்படுத்திய பிரச்சனையைப் பற்றி கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், அந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியை எப்படியாவது வெற்றி பெற வைத்தாக வேண்டும் என்று நான் எண்ணினேன். ஆனால் எனக்கு எந்த வழியும் இல்லததால்தான் அப்படியொரு காரியத்தை செய்தேன். அப்போது எனக்கு விளையாட்டில் போதிய அனுபவம் இல்லை. ஒருவேளை நான் சரியாக யோசித்திருந்தால் வேறு ஒரு நல்ல முடிவை எடுத்திருப்பேன் என்று கூறினார்.

- Advertisement -

மேலும் பேசிய அவர், நான் பந்தை சேதப்படுத்தப்போகிறேன் என்பதை அந்த போட்டியில் விளையாடிய மற்ற ஆஸ்திரேலிய பவுலர்களுக்கும் தெரியும் என்றும் கூறினார். அவரின் இந்த பேட்டியைக் கண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம், மீண்டும் அந்த பிரச்சனையின் மீதான விசாரணையைத் தொடங்கியிருக்கிறது. ஏனெனில், அந்தப் பிரச்சனை நடந்து முடிந்த பிறகு, ஸ்டீவ் ஸ்மித், வார்னர் மற்றும் பேன்கிராஃப்ட் ஆகியோரிடம் விசாரணை நடத்தியது ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம். அந்த விசாரணையில், குற்றமிழைத்த மூவரும் நாங்கள் மட்டும்தான் இதில் சம்பத்தப்பட்டோம் மற்ற வீரர்கள் யாருக்கும் இதைப்பற்றி தெரியாது என்று வாக்குமூலம் கொடுத்தனர்.

warner

எனவே அவர்களுக்கு மட்டும் தண்டனை வழங்கியது அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம். ஆனால் தற்போது பேன்கிராஃப்ட் அளித்துள்ள பேட்டியில் அணியில் இருந்த பௌலர்களுக்கும் இதைப் பற்றி முன்கூட்டியே தெரியும் என்று கூறியதால், அந்த பௌலர்களிடமும் இதைப் பற்றிய விசாரணையை மேற்கொள்ளும் முடிவில் இருப்பதாக அறிவித்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம். இதுகுறித்து மேலும் தெரிவித்த அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம், அந்த பிரச்சனை குறித்த விவரங்களை வீரர்கள் தாங்களாகவே முன்வந்து எங்களிடம் கூறிவிடுங்கள். ஒருவேளை நாங்கள் விசாரணை செய்து உண்மைகளை வெளிக் கொண்டுவந்தால் விளைவுகள் படுமோசமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

- Advertisement -

Aus

அந்த போட்டியில் மிட்சல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசில்வுட், நாதன் லயன் மற்றும் மிட்சல் மார்ஷ் ஆகியோர் தான் ஆஸ்திரேலிய அணியின் பௌலர்களாக இருந்தனர். பந்தை சேதப்படுத்திய அந்த பிரச்சனைக்கு ஐசிசியே கண்டனத்தை மட்டுமே தெரிவித்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் கடுமையான தண்டனையை வழங்கியது. தற்போது அந்த பிரச்சனையின்மீது விசாரணை மேற்கொள்ளவிருப்பதால், அந்த போட்டியில் விளையாடிய பௌலர்களுக்கும் கடுமையான தண்டனை வழக்கப்படுமென்றும் அந்த தண்டனை தடை செய்யும் அளவிற்கு இருக்கலாம் என்றும் தெரிகிறது.

Advertisement