- Advertisement -
உலக கிரிக்கெட்

என்னதான் சம்பள பிரச்சனை இருந்தாலும் கொரோனாவிற்கு நிதியுதவி அளித்த பங்களாதேஷ் வீரர்கள் – ரசிகர்கள் பாராட்டு

கொரோனா வைரஸ் உலகில் தற்போது பெருமளவில் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் அரசும், பல்வேறு தொண்டு நிறுவனங்களும், தனியார் அமைப்புகளும் நிதி உதவி செய்து வருகின்றனர். நிதி உதவியை தாண்டி மருத்துவ உதவியே பெரிதும் தேவைப்படுகிறது. எனும் ஊரில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் உதவியும் தேவைப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் 5 பேர் வரை தற்போது இறந்துள்ளனர். வங்கதேச அரசு இதனை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த நாட்டு மக்களும் தனியார் நிறுவனங்களும் தங்களது நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.

- Advertisement -

இதனடிப்படையில் வங்கதேச வீரர்கள் தங்களுடைய அரை மாத சம்பளத்தை நன்கொடையாக அந்நாட்டு அரசாங்கத்திற்கு வழங்க முடிவு செய்துள்ளனர். மொத்தம் 27 பேர் இந்த நன்கொடையை வழங்கியுள்ளார் . கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகமே போராடிக்கொண்டிருக்கிறது. வங்கதேசத்திலும் மிகப்பெரிய அளவில் இது பரவிக்கொண்டிருக்கிறது.

எங்களால் முடிந்த இந்த தொகையையும், விழிப்புணர்வுக்கான பல செய்திகளையும் அரசிடம் கொடுக்க உள்ளோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடியாக வேண்டும். இந்த கட்டத்தில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள். மேலும் அவர்களும் தற்போது பாதுகாப்பு காரணமாக வீட்டினுள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஏற்கனவே பங்களாதேஷ் வீரர்களுக்கும் அந்த அணி நிர்வாகத்திற்கும் சம்பள பிரச்சனை பலமுறை வந்தநிலையில் அவர்கள் தானாக முன்வந்து அவர்கள் நாட்டு மக்களுக்கு அளித்திருக்கும் இந்த உதவி தற்போது பாராட்டுகளை பெற்று வருகிறது.

இந்தியாவிலும் இதே போன்று கங்குலி, கம்பீர் மற்றும் பதான் சகோதரர்கள் ஆகியோர் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக உதவிகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by