வீடியோ : இதைவிட ஒரு ஒர்ஸ்ட்டான ரெவியூ யாரும் எடுத்திருக்க மாட்டாங்க – மிஸ் பண்ணாம பாருங்க

DRS
- Advertisement -

பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. இதுவரை நியூசிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியைக் கூட கைப்பற்றாமல் இருந்த பங்களாதேஷ் அணி முதல் முறையாக இந்த போட்டியை வென்று வரலாறு படைத்துள்ளது. இந்த போட்டியில் முதலாவதாக விளையாடிய நியூசிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 328 ரன்கள் குவித்தது.

ban

- Advertisement -

அதனைத்தொடர்ந்து விளையாடிய பங்களாதேஷ் அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 458 ரன்களை குவித்தது. இதன் காரணமாக 130 ரன்கள் பின்தங்கி நிலையுடன் தங்களது 2வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 169 ரன்களை மட்டுமே குவிக்க 40 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு பங்களாதேஷ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 42 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின்போது பங்களாதேஷ் அணியின் கேப்டன் எடுத்த ஒரு மோசமான ரிவ்யூ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் போது 37வது ஓவரை வீசிய டஸ்கின் அகமது பேட்ஸ்மேன் எல்பிடபிள்யூ ஆகிவிட்டார் என்று அப்பீல் செய்தார். ஆனால் அதற்கு அம்பயர் அவுட் கொடுக்கவில்லை பந்து பேட்டில் தான் பட்டது என்று தெளிவாகக் கூறிவிட்டார். ஆனாலும் அதனை ஏற்காத வங்கதேச அணியின் கேப்டன் மொமினுல் ஹக் DRS டைம் முடியும் முன்னர் மீண்டும் ரெவியூ கேட்டார்.

- Advertisement -

இதையும் படிங்க : நியூசிலாந்து அணிக்காக இப்படி ஒரு நிலைமை. வரலாறு படைத்த பங்களாதேஷ் – குவியும் வாழ்த்துக்கள்

பின்னர் ரீபிளேவில் பார்க்கும் போது பந்து தெளிவாக மிடில் பேட்டில் பட்டது தெரிந்தது. இதனை கண்ட வர்ணனையாளர்கள் நேரலையில் சிரித்து விட்டனர். இதைவிட மிகவும் மோசமான DRS எதுவும் இருக்காது என்று கூறி தற்போது இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். ரசிகர்களும் இந்த வீடியோவை பார்த்து பகிர்ந்து கிண்டல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement