நியூசிலாந்து அணிக்காக இப்படி ஒரு நிலைமை. வரலாறு படைத்த பங்களாதேஷ் – குவியும் வாழ்த்துக்கள்

ban
- Advertisement -

மொமினுல் ஹக் தலைமையிலான வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தற்போது நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 2022ஆம் ஆண்டு பிறந்து முதல் போட்டியாக இந்த நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் போட்டி ஒன்றாம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் முதலில் டாம் லேதம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

nzvsban

- Advertisement -

அதன்படி தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணியானது 328 ரன்களைக் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை விளையாடிய பங்களாதேஷ் அணி 458 ரன்கள் குவிக்க நியூசிலாந்து அணியை விட 130 ரன்கள் முன்னிலை பெற்றது. அதனை தொடர்ந்து நியூசிலாந்து அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் 169 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் காரணமாக 40 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கு பங்களாதேஷ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய பங்களாதேஷ் அணி 16.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 42 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

ebadot

ஏனெனில் கடந்த 2001-ஆம் ஆண்டிலிருந்து நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் பங்களாதேஷ் அணி இதுவரை ஒருமுறை கூட அந்த அணியை அங்கு வீழ்த்தியது கிடையாது.

- Advertisement -

இதையும் படிங்க : கும்ப்ளே, ஹர்பஜன், அஷ்வின் மூவரின் சாதனையையும் காலி செய்த ஷர்துல் தாகூர் – என்ன ஸ்பெஷல் தெரியுமா?

தற்போதுதான் முதல்முறையாக ஒரு டெஸ்ட் போட்டியை பங்களாதேஷ் அணி நியூசிலாந்து மண்ணில் வென்றுள்ளது. இதன் காரணமாக தற்போது பங்களாதேஷ் அணியை வாழ்த்தி ரசிகர்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement