கும்ப்ளே, ஹர்பஜன், அஷ்வின் மூவரின் சாதனையையும் காலி செய்த ஷர்துல் தாகூர் – என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Thakur-1
Advertisement

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணியானது 202 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக தென்ஆப்பிரிக்கா அணி தங்களது முதல் இன்னிங்சை விளையாடியது. எப்படியோ இந்திய அணி வீரர்கள் நேற்று இரண்டாம் நாள் ஆட்ட நேரத்தின் போது அவர்களை 229 ரன்களில் ஆல் அவுட் ஆக்கினார். இப்படி தென் ஆப்பிரிக்க அணியை சுருட்ட இந்திய பந்துவீச்சாளர்கள் சார்பாக யாரும் எதிர்பாராத வேளையில் ஷர்துல் தாகூர் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 61 ரன்கள் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

thakur

டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 5 விக்கெட் எடுப்பது இதுவே முதல் முறை என்றாலும் இந்த சிறப்பான பந்துவீச்சின் மூலம் அவர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய பவுலர் சார்பாக மிகச்சிறந்த பந்து வீச்சாளராக திகழ்ந்த ஹர்பஜன் சிங் சாதனையை அவர் இந்த ஸ்பெல்லிங் மூலம் முறியடித்துள்ளார்.

- Advertisement -

ஹர்பஜன்சிங் தென்னாப்பிரிக்கா மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 120 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் எடுத்ததே தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய வீரர் ஒருவரின் சிறப்பான பந்துவீச்சாக இருந்தது. அதனை தற்போது தாகூர் (7/61) முறியடித்துள்ளார்.

thakur 2

அதேபோன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிறந்த பவுலிங் ஸ்பெல் என்ற சாதனையை தன்வசம் வைத்திருந்த அஷ்வினின் சாதனையையும் அவர் முறியடித்துள்ளார். அஷ்வின் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 66 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் செய்த ஏமாற்றுவேலை. போட்டி முடிந்ததும் புகார் அளித்த தெ.ஆ கேப்டன் – நடந்தது என்ன?

ஆனால் அதனை தற்போது 61 ரன்களுக்கு 7 விக்கெட் வீழ்த்தி தகர்த்துள்ளார். மேலும் குறிப்பிட்ட இந்த ஜோகனஸ்பர்க் மைதானத்தில் அணில் கும்ப்ளே 6 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். ஆனால் தற்போது இந்த மைதானத்தில் ஷர்துல் தாகூர் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement