ரிஷப் பண்ட் செய்த ஏமாற்றுவேலை. போட்டி முடிந்ததும் புகார் அளித்த தெ.ஆ கேப்டன் – நடந்தது என்ன?

Pant
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியானது இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. அதன்படி இந்திய அணி ஏற்கனவே தங்களது முதல் இன்னிங்சில் 202 ரன்கள் குவித்திருக்க இன்றைய இரண்டாம் ஆட்டத்தில் தங்களது முதல் இன்னிங்சை தொடர்ந்த தென்னாப்பிரிக்கா அணியானது 229 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் காரணமாக 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.

Rahane

- Advertisement -

இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்கள் குவித்து உள்ளதால் தற்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 58 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் போட்டி முடிவடைய மூன்று நாட்கள் முழுமையாக உள்ளதனால் நிச்சயம் இந்த போட்டியில் முடிவு கிடைக்க வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் செய்த தவறு ஒன்று தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அதன்படி தென்னாப்பிரிக்க வீரர் வேண்டர்டுசைன் ஆட்டமிழந்த விதம் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. ஏனெனில் பந்து தரையில் பட்டு பிடித்த பின்னரும் பண்ட் அம்பயரிடம் அவுட் கேட்டார்.

pant 1

அம்பயரும் அவுட் என்று முடிவை அறிவித்துவிட்டார். பேட்ஸ்மேனும் ரிவியூ கேட்காமல் சென்றுவிட்டார். பின்னர் விக்கெட் விழுந்த உடனே போட்டி உணவு இடைவேளைக்காக நிறுத்தப்பட்டது. அப்போது அந்த இடைவேளையில் விக்கெட் ரீபிளேவை பார்க்கும்போது பந்து கீழே பட்டு பிடிக்கப்பட்டது தெளிவாக தெரிந்தது. இதன் காரணமாக பேட்ஸ்மேன் மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இதையும் படிங்க : புஜாரா, ரஹானேவை மட்டும் குறை சொல்லறீங்க. இவரை பத்தி யாரும் பேசுறதில்லை – ஆசிஷ் நெஹ்ரா பேட்டி

ஆனால் பந்து பிடிக்கப்பட்டு மிக நீண்ட நேரம் எந்தவித அப்பீலும் செய்யாததால் பேட்ஸ்மேன் ஆட்டமிஷந்ததாகவே இறுதியில் கூறப்பட்டது. இதன் காரணமாக போட்டி முடிந்ததும் தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டீன் எல்கர் இந்த விக்கெட் குறித்து நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement