புஜாரா, ரஹானேவை மட்டும் குறை சொல்லறீங்க. இவரை பத்தி யாரும் பேசுறதில்லை – ஆசிஷ் நெஹ்ரா பேட்டி

Nehra
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோரது பேட்டிங் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஏனெனில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் சொதப்பினர். அதனைத்தொடர்ந்து இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்த இருவரும் முதல் இன்னிங்ஸில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

pujara 1

- Advertisement -

இந்த இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்சிலும் புஜாரா 3 ரன்களிலும், ரஹானே ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக இவர்கள் இருவரும் அணியில் நீடிக்க வேண்டுமா என்பது குறித்து பலரும் தங்களது கேள்விகளை எழுப்புகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெக்ரா கூறுகையில் :

என்னை பொருத்தவரை ரகானே மற்றும் புஜாரா ஆகிய இருவரும் பல போட்டிகளாகவே சொதப்பி வருகின்றனர். ஆனாலும் அவர்களை அணியில் இருந்து நீக்குவது சரியான முடிவாக இருக்காது. ஏனெனில் புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டு உள்ளனர். அவர்கள் நிச்சயம் அணியில் தொடரவேண்டும்.

Kohli

எப்போதுமே இந்திய அணி சறுக்கலை சந்திக்கும் போது அவர்கள் இருவரை மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் யாரும் விராட் கோலியின் சறுக்கலை பேசாமல் இருக்கின்றனர். ஏனெனில் விராட் கோலியும் கடந்த சில தொடர்களாகவே பெரிதளவு ரன் குவிக்க முடியாமல் திணறி வருகின்றனர். அவரை நீக்குவது குறித்து இதுவரை யாரும் பேசவில்லை. யாரும் எந்த ஒரு கேள்வியும் எழுப்பவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : டிராவிட் அவங்க 2பேர் விடயத்திலும் ஒரு கடுமையான முடிவு எடுத்தா தான் இந்தியா உருப்படும் – தினேஷ் கார்த்திக்

அவர் அணியின் கேப்டன் தான் ஆனால் அவரை புஜாரா மற்றும் ரஹானே ஆகியோருடன் ஒப்பிடக்கூடாது இருந்தாலும் ரஹானே மற்றும் புஜாராவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே எனது கருத்து என நெஹ்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement