தனது ஓய்வை அறிவித்துவிட்டு தோனி எப்படி இருந்தார் தெரியுமா ? – பயிற்சிக்கு தலைமை தாங்கிய பாலாஜி பேட்டி

Balaji

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் அவர் ஓய்வு பெற்று ஒரு வாரம் ஆகியும் அவர் குறித்த செய்திகள் அடங்கிய பாடில்லை. இந்நிலையில் கடந்த ஐந்து நாட்கள் சென்னையில் பயிற்சிகளை முடித்த தோனி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.

Raina 3

சென்னையில் பயிற்சியில் ஈடுபட்ட போதுதான் தனது ஓய்வு அறிவிப்பை அவர் வெளியிட்டார். இந்நிலையில் தோனியில் அந்த ஓய்வு அறிவிப்பு குறித்தும் அந்த பயிற்சி நாட்கள் குறித்தும் தமிழக வீரர் பாலாஜி ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது : நான் பொதுவாகவே தோனியிடம் அதிகம் பிட்ச் குறித்து பேசுவேன்.

தோனி ஓய்வு பெற்ற அன்றைய பயிற்சிக்குப் பின்பு இருவரும் பேசிக் கொண்டோம் அதன்பின்னர் பேசிவிட்டு ஓய்வு அறைக்கு சென்று விட்டேன். அப்போது தான் எனக்கே தெரியும் தோனி இன்று ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு வந்தார் என்பது. மேலும் பேசிய பாலாஜி : தன்னுடைய ஓய்வு குறித்து பேசாமல் சாதாரணமாக வந்து தோனி பிச்சை அதிகமான நீரை இருக்கும்படி கூறிவிட்டு சென்றார்.

csk

அதன்பின்னர் நான் ஓய்வறைக்கு சென்ற பின்புதான் எனக்கு அவர் ஓய்வு பெற்றது எனக்கே தெரியவந்தது. ஓய்வு அறிவிப்பு பற்றி பேசாமல் இயல்பாகவே என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். எனக்கு அப்போது எதுவுமே தெரியாது. அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய தினம் அன்று ஆனாலும் அந்த தருணத்தை அவர் மிக மிக இயல்பாக கடந்தார்.

- Advertisement -

Balaji-3

அதுதான் தோனி வாழ்வில் எந்த ஒரு தருணமாக இருந்தாலும் அதனை சரியான போக்கில் எடுத்துக்கொண்டு நகர்வது தான் அவருடைய ஸ்டைல். ஓய்வு அறிவிப்பை அவர் அப்படியே இயல்பாக எடுத்துக் கொண்டார் என்று பாலாஜி கூறியது குறிப்பிடத்தக்கது.