எவ்ளோ கஷ்டத்தை பாத்தாச்சி. இதையும் நாம் கடந்து மீண்டு வருவோம் – பாலாஜி நம்பிக்கை

Balaji
- Advertisement -

உலகின் பல நாடுகள் வைரஸின் கோரத்தாண்டவத்தை அனுபவித்து வருகின்றன. கிட்டத்தட்ட தற்போது வரை 30 ஆயிரம் பேர் உலகம் முழுவதும் தங்களது உயிரை இழந்துள்ளனர். மேலும் 5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

corona 1

- Advertisement -

இதன் காரணமாக உலகம் முழுவதும் ஒவ்வொரு அரசும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்தியாவும் 21 நாட்களுக்கு ஊரடங்கை பின்பற்றி வருகிறது. இதற்கு இடையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் லட்சுமிபதி பாலாஜி கோரோனா குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது :

நாம் இதுபோன்ற பேரிடர்களை தாக்குப்பிடிக்க படைக்கப்பட்டுள்ளோம். நம் முன்னோர்கள் இது போன்ற பல நோய்களுக்கு எதிராக போராடியுள்ளனர். நாமும் கடந்த 2004 ஆம் ஆண்டில் வந்த சுனாமியிலிருந்தும் 2015 ஆம் ஆண்டில் வந்த சென்னை பெருவெள்ளத்தில் இருந்தும் போராடி மீண்டு வந்துள்ளோம். இது போன்ற கடினமான பாதைகளை நம்மால் கடந்து செல்ல முடியும்.

Balaji 1

அனைத்து வேற்றுமைகளையும் தள்ளிவைத்துவிட்டு ஒன்றுகூடி மாற்றி மாற்றி உதவி செய்து கொள்வோம். மக்களுக்கு சுய கட்டுப்பாடு மிகவும் அவசியம். அரசு கூறியுள்ளதைக் கேட்டு அறிந்து நிலைமையை சரியாக புரிந்துகொண்டு சுய கட்டுப்பாடுடன் இருந்து கொள்ள வேண்டும். காய்ச்சல் சிறிதாக இருந்தாலும் உடனடியாக மருத்துவமனையை அணுகி ஆலோசனையை பின்பற்ற வேண்டும் என்று கூறியுளளார்.

- Advertisement -

லட்சுமிபதி பாலாஜி பாலாஜி கடந்த 2002ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமானார். எல்லாவிதமான கிரிக்கெட்டிலும் சேர்த்து 76 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடி 73 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Balaji 2

இந்நிலையில் பலரும் கொரோனா வைரஸ் குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்து தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

Advertisement