சிக்கலை சரிசெய்ய சி.எஸ்.கே பவுலர்களுக்கு ஸ்பெஷல் பிராக்டீஸ் குடுக்கும் – பவுலிங் கோச் பாலாஜி

Balaji
- Advertisement -

கடந்த ஆண்டு நடைபெற்ற 14-வது ஐபிஎல் தொடரில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிஎஸ்கே அணியானது அனைத்து அணிகளுக்கும் எதிராக தங்களது ஆதிக்கத்தை துவக்க போட்டிகளிலிருந்து இறுதிப் போட்டி வரை வெளிப்படுத்தி அசைக்க முடியாத அணியாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் காரணமாக தற்போது நடப்பு சாம்பியனாக திகழ்ந்து வரும் சென்னை அணியானது இந்த ஐபிஎல் தொடரிலும் தங்களது அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னதாக தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

CSK-1

- Advertisement -

இதன் காரணமாக புதிய கேப்டனாக ஜடேஜா அந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டார். அவரது தலைமையின் கீழ் சி.எஸ்.கே சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் சிஎஸ்கே அணி மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஐபிஎல் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து படு மோசமான நிலைக்கு சி.எஸ்.கே அணி தள்ளப்பட்டுள்ளது.

இப்படி தொடர்ச்சியாக சிஎஸ்கே அணி தோல்விகளை சந்தித்து வருவதற்கு முக்கிய காரணங்களாக சில விடயங்கள் பார்க்கப்படுகின்றன. அந்த வகையில் துவக்க வீரரான கெய்க்வாட் சிறப்பாக விளையாடாததும், சிஎஸ்கே அணியில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட பவர்ப்ளே ஸ்பெஷலிஸ்ட் தீபக் சாஹர் காயம் காரணமாக அணியில் விளையாடாமல் இருப்பதும் சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

CSK Lost to LSG

என்னதான் பேட்டிங்கில் சிஎஸ்கே அணி மிகச் சிறப்பாக செயல்படும் அணியாக பார்க்கப்பட்டாலும் தற்போது இருக்கும் பந்துவீச்சு படுமோசமாக உள்ளது. முதல் மூன்று போட்டிகளில் பவுலிங் வீக்னஸ் அப்பட்டமாக தெரிந்தது. ஏனெனில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது சென்னை அணி 210 ரன்கள் குவித்தும் கூட அந்த ரன்களை வைத்து எதிரணியை நிறுத்த முடியவில்லை. அதுமட்டுமின்றி பெரும்பாலும் இரவு நேரங்களில் போட்டி நடைபெறுவதால் பனிப்பொழிவு காரணமாக அனுபவமற்ற சென்னை பந்துவீச்சாளர்கள் அதிக அளவு தடுமாற்றத்தை சந்தித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இப்படி சென்னை அணியின் பவுலர்கள் பனி தாக்கத்தின் போது பந்து வீச கஷ்டப்படும் நிலையில் தற்போது சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமிபதி பாலாஜி பவுலர்களுக்கு தனிப்பட்ட கவனத்துடன் கூடிய பந்துவீச்சு பயிற்சிகளை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை அணியில் உள்ள அனைத்து பவுலர்களுக்கும் சரியான முறையில் பயிற்சியை வழங்கி வரும் பாலாஜி பனியின் தாக்கத்திலும் பந்துவீச்சாளர்கள் எந்த ஒரு இன்னலும் இன்றி சிறப்பாக பந்து வீச ஈரம் நிறைந்த பந்துகளை கொடுத்து பயிற்சி அளித்து வருவதாக கூறப்படுகிறது.

mukesh choudhary

இவ்வகையான ஈரம் நிறைந்த பந்தில் பயிற்சி அளிக்கும்போது சென்னை அணி இரண்டாவதாக பந்து வீசினாலும் மைதானத்தில் டியூ இருக்கும் போதும் சிறப்பாக பந்து வீச முடியும் என்கிற காரணத்தினாலேயே இந்த ஸ்பெஷல் பிராக்டீஸை லட்சுமிபதி பாலாஜி வழங்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் அப்படி ஈரம் நிறைந்த பந்துகளுடன் ஸ்லோ பால், வொயிடு யார்க்கர் வீசுவது என தனித்தனியே வீரர்களுக்கு நுணுக்கங்களை அவர் கற்றுக் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : இவருக்கா டி20 டீம்ல இடமில்லை. ஐ.பி.எல் தொடரில் அசத்தி வரும் வீரர் – ரசிகர்கள் மத்தியில் குவியும் ஆதரவு

இந்த பயிற்சியில் முகேஷ் சவுத்ரி மற்றும் பிரிடோரியஸ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதேபோன்று பேட்டிங்கில் தடுமாறும் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கும் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கல் ஹசி தனிப்பட்ட முறையில் சிறப்புப் பயிற்சியை அளித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த போட்டியில் சி.எஸ்கே அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement