இவருக்கா டி20 டீம்ல இடமில்லை. ஐ.பி.எல் தொடரில் அசத்தி வரும் வீரர் – ரசிகர்கள் மத்தியில் குவியும் ஆதரவு

PBKS vs KKR Umesh
- Advertisement -

கடந்த ஆண்டு நடைபெற்ற 14-வது ஐபிஎல் தொடரில் பங்கேற்ற இளம் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி இந்திய அணியிலும் இடம் பிடித்தனர். அந்த வகையில் கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட ருதுராஜ் கெய்க்வாட், படிக்கல், ஆவேஷ் கான், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் படேல் ஆகிய வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்று இருந்தனர். அதோடு தாங்கள் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வந்ததால் இந்த பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்திலும் நல்ல விலைக்கு ஏலம் போயினர்.

IPL 2022 (2)

- Advertisement -

அதேபோன்று இந்த சீசனிலும் அவர்களது ஆட்டம் தற்போது படிப்படியாக மெருகேறி வருகிறது. அதே வேளையில் இளம் வீரர்களுக்கு போட்டியாக ஏற்கனவே இந்திய அணியில் இருந்த மூத்த வீரர்களும் இந்த ஐபிஎல் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக தினேஷ் கார்த்திக் பினிஷராகவும், சுழற்பந்துவீச்சில் குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோரும் பேட்டிங்கில் உத்தப்பா போன்றோரும் அசத்தி வருகின்றனர்.

அதே வேளையில் இந்த லிஸ்டில் இல்லாத வீரராக டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் உமேஷ் யாதவும் அற்புதமாக பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய t20 அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வரும் உமேஷ்யாதவ் இந்த ஐபிஎல் தொடரில் தான் தேர்வான பிறகு நிச்சயம் என்னுடைய சிறப்பான பந்துவீச்சை இத்தொடரில் வெளிப்படுத்தி இந்திய அணியில் மீண்டும் இணையும் வாய்ப்பை பெறுவேன் என்று சபதம் செய்திருந்தார்.

Russell Umesh Yadhav

அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து தனது அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் உமேஷ் யாதவ் பவர்பிளே ஓவர்களில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி தற்போது அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் உமேஷ் யாதவ் இருபுறங்களிலும் ஸ்விங் செய்வதால் அவரை எதிர்கொள்வதற்கு பேட்ஸ்மேன்கள் கஷ்டப்படுகிறார்கள்.

- Advertisement -

அதோடு டெஸ்ட் போட்டிகளில் நல்ல அனுபவம் உள்ள அவர் துல்லியமான ஏரியாவில் பந்துகளை வீசுவதால் இவரது பந்துவீச்சை சமாளிப்பது பேட்ஸ்மேன்களுக்கு பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்திய அணியில் பும்ரா, சிராஜ், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார் போன்ற வீரர்களின் ஆதிக்கம் இருந்து வரும் வேளையில் தற்போது சீனியர் வீரரான உமேஷ் யாதவ் அவர்களையும் மீறி தற்போது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க : நானே கேப்டனா இருக்கேன். ஆனா நீங்க எனக்காக இதை செய்யுங்க – தோனியிடம் முறையிட்ட ஜடேஜா

இதனால் நிச்சயம் இந்திய அணியில் இவரை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற ஆதரவு ரசிகர்கள் மத்தியில் குவிந்து வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஓவருக்கு ஆறு ரன்களுக்கும் குறைவாக விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement