நானே கேப்டனா இருக்கேன். ஆனா நீங்க எனக்காக இதை செய்யுங்க – தோனியிடம் முறையிட்ட ஜடேஜா

Jadeja
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னதாக சென்னை அணியின் கேப்டனாக இருந்து வந்த மகேந்திர சிங் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். அதன் காரணமாக அடுத்த கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவுக்கு கேப்டன் வாய்ப்பு வழங்கப்பட்டது.

CSK vs PBKS 3

- Advertisement -

தனது கடைசி கட்டத்தில் தோனி இருப்பதனாலும், அடுத்த இளம் சிஎஸ்கே அணியை உருவாக்க வேண்டும் என்பதனாலும் ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டதால் அவரது தலைமையில் சிஎஸ்கே அணி எவ்வாறு இந்த தொடரை எதிர்கொள்ளப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே நிலவி வந்தது. ஆனால் முன்பு எப்போதும் இல்லாத வகையில் வரலாற்றிலேயே முதல் முறையாக சென்னை அணி ஒரு தொடரில் பங்கேற்ற முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராகவும், இரண்டாவது போட்டியில் லக்னோ அணிக்கு எதிராகவும், மூன்றாவது போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராகவும் இப்படி வரிசையாக ஹாட்ரிக் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே அணி பின்தங்கி படு மோசமான நிலையை அடைந்துள்ளது. இந்நிலையில் இனிவரும் போட்டிகளில் சென்னை அணி பலமாக வடிவமைத்து வெற்றிகளை குவிக்க வேண்டும் என்கிற விடயத்தில் அணி நிர்வாகமும் வீரர்களும் உறுதியாக உள்ளனர்.

அதன்காரணமாக தற்போது சிஎஸ்கே அணி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. அடுத்ததாக ஏப்ரல் 9-ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் சிஎஸ்கே அணி விளையாட உள்ளது. இந்த போட்டிக்கு முன்னர் தற்போது வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் என அனைவரையும் வைத்து ஒரு மீட்டிங் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அந்த மீட்டிங்கில் சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா வெளிப்படையாக பல்வேறு விஷயங்களை வீரர்களிடம் பேசினார்.

- Advertisement -

அதோடு தோனியிடமும் அவர் சில கோரிக்கைகளை முன்வைத்ததாக தெரிகிறது. அந்த வகையில் ஜடேஜா தோனியிடம் கூறியதாவது : உங்களது ஆலோசனை களத்தில் நிச்சயம் எனக்கு தேவை. இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் தான் கேப்டன்சி செய்யவேண்டும். பரபரப்பு இல்லாத நேரத்தில் நான் கேப்டன் பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். உங்களிடமிருந்து கேப்டன்சியை இன்னும் நன்றாக கற்றுக்கொண்டு இரண்டாவது பாதியில் நான் தனியாக கேப்டன்சி செய்ய விரும்புகிறேன்.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியில் நான் இணைய இவரே காரணம். ஆனா அது தோனி கிடையாது – ராபின் உத்தப்பா வெளிப்படை

அதுவரை எனக்கு உதவுங்கள். அப்போதுதான் என்னுடைய அழுத்தம் குறையும். டீமுக்கும் அதுதான் நல்லது என்று கூறியுள்ளார். மேலும் ஜடேஜாவின் இந்த கோரிக்கையை தோனியும் ஏற்று கொண்டதால் இனி வரும் போட்டிகளில் தோனி இக்கட்டான நிலையில் அவரே முடிவு எடுப்பார் என்றும் ஜடேஜா ஒரு நிழல் கேப்டனாக செயல்படுவார் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement